நடந்த கதை
உயர்ந்த நடிகரும் வருஷக்கணக்கில் படம் எடுப்பதில் பெயர் பெற்ற டைரக்டரும் சமீபத்தில் ஒரு ஒட்டலில் சந்தித்துக் கொண்டார்கள். நடிகருக்கு தனது 2 படங்கள் அடுத்தடுத்து ஒடாததால் இந்த இயக்குனரிடம் ஒரு படம் இயக்கித்தர கேட்டிருக்கிறார். இயக்குனரும் சரி என்று அப்போதே கதை சொல்லத் தொடங்கியிருக்கிறார். ஆனால் அந்தக்கதை தனது வேகமான நடிப்புக்கு சரிவராது என்று எண்ணி நடிகர் வேறு கதை சொல்லச்சொல்லி கேட்டிருக்கிறார்.
இதை எதிர்பாராத இயக்குனர் அதை தனது படைப்புக்கு நேர்ந்த அவமரியாதையாக எடுத்துக் கொண்டு நடிகரிடம் எகிற... ஒருவழியாய் சமாளித்து அவரிடம் இருந்து விடுபட்டு வந்திருக்கிறார், நடிகர்.
கதையில் திருப்பம் ஏற்படும்னு சொல்றது இதைத்தானோ!
15 நாட்கள் மட்டும் அனுமதி!
அயர்லாந்து டாக்டரை திருமணம் செய்துகொண்டு அங்கேயே போய்விட்ட `கோபி' நடிகையை, விசேஷ அனுமதி பெற்று மீண்டும் நடிக்க அழைத்து வந்து இருக்கிறார், மலையாள திலீப நடிகர்!
`கோபி' நடிப்பதற்கு 15 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கியிருக்கிறார், அவருடைய டாக்டர் கணவர்! படப்பிடிப்பு, தொடுபுழாவில் நடக்கிறது.