அரசியல் நகைச்சுவை - 2


  • தலைவர் திடீர்னு ஆஸ்பிடல் கட்டுறாரே என்ன விஷயம்?

    அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்களாம். தொழிலை ஆரம்பிச்சுடலாம்னு பார்க்கிறாரு.

  • தலைவரின் அறுபதாம் கல்யாணத்தில் சிக்கல்.

    என்னவாம்?

    எந்த மனைவியோட கொண்டாடுவதுன்னுதான்...!

  • எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?

    எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.

  • மழை வர்ற சமயமெல்லாம் ஏன் தலைவர் ஓடிப் போய் ஸ்கூல் பக்கம் நின்னுக்கிறாரு?

    தலைவர் மழைக்கு கூட பள்ளிபக்கம் ஒதுங்கியது இல்லைனு எதிர்கட்சி தலைவர் பேசுறதை தடுத்து நிறுத்தத்தான்.

  • தலைவர் ஒரு சோடா பைத்தியம்னு எப்படி சொல்லற?

    அன்பார்ந்தனு பேசினதும் சோடா கொடுங்கப்பாங்கிறாரு.

  • நேத்து நடந்த கல்யாணத்துல தலைவர் மானத்தை வாங்கிட்டார்

    என்னாச்சி?

    திருமணத்தை நடத்தி வைத்தநான், சாந்தி முகூர்த்தத்தையும் நடத்திவைத்து மணமக்களை சந்தோஷப் படுத்துவேன்னு சொல்லிட்டார்.

  • ஊழல் பெருச்சாளிகளை பிடிக்க சொல்லி மேலிட உத்தரவு, என்ன பண்ணலாம்?

    நாலு பூனைகளை வாங்கிட்டு போகலாம் சார்.

  • தலைவரே...! மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க வாங்க ஓடிடலாம்...!

    இருய்யா...! எனக்கு ஒரு செருப்பு தான் கிடைச்சு இருக்கு...!

  • நம்ம தலைவர் சுத்த அல்பம்

    ஏங்க?

    அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தா என் மனைவிக்கு ஒரு நர்ஸ் பட்டமாவது கொடுங்க எப்படியாவது என் தம்பிக்கு ஒரு கம்பௌன்டர் பட்டம் கொடுங்கன்னு நச்சரிக்கிறாராம்.

  • இது எந்த ஊரு? இதுக்கு முன்னாடி எப்பவோ இங்க வந்த மாதிரி இருக்கே?

    கொஞ்சம் மெதுவா பேசுங்க. இதுதான் நீங்க எம்.எல்.ஏ வாக ஜெயிச்ச தொகுதி.

  • தலைவர் மைக் செட்காரங்கிட்ட கூட லஞ்சம் வாங்கிட்டார்...! எப்படி?

    மேடையில் பேசும்போது அரைமணிக்கு ஒரு தடவை சிறந்த ஒளி, ஒலி அமைப்புக்கு மாலா சவுண்ட் சர்வீஸ்னு சொல்றாரு...!

  • வர வர நாடு ரொம்ப கெட்டுப் போச்சு.

    ஏன் அலுத்துக்குறீங்க?

    ஷேர் மார்கெட் நிலவரம் மாதிரி எம்.பி.க்களோட விலை நிலவரத்தையும் டி.வி.யில சொல்ல ஆரம்பிச்சுட்டாங்களே.

  • போராட்டத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் கட்டித் தழுவிக்கிறாங்களே ஏன்?

    நாடு தழுவிய போராட்டமாம்.

  • இது எந்த ஊரு? இதுக்கு முன்னாடி எப்பவோ இங்க வந்த மாதிரி இருக்கே?

    கொஞ்சம் மெதுவா பேசுங்க. இதுதான் நீங்க எம்.எல்.ஏ.வாக ஜெயிச்ச தொகுதி.

  • பொது கூட்ட மேடையில் எதுக்கு நிறைய முக்காலி போட்டிருக்கு?

    தலைவருக்கு நாற்காலி ஆசை என எதிர்க்கட்சிகள் தாக்கிப் பேசாமல் இருக்கத்தான்.

  • இதுக்கு பேரு எம்.எல்.ஏ. வெடி!

    எப்படி வெடிக்கும்?

    வெடிக்காது, பத்த வச்ச உடனே காணாம போயிடும்.

  • பட்ஜெட் கூட்டத்தொடர்ல என்ன தகராறு?

    பட்ஜெட்டை தாக்கல் செய்றதுக்குப் பதிலா குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் பண்ணிட்டாராம்.

  • தலைவர் உருக்கமா பேசியும், தாய்க்குலமெல்லாம் கண்ணீர் விட லைங்கிறதுக்கு இப்படியா பண்ணுவார்?

    என்ன பண்ணினார்?

    கண்ணீர் புகைக் குண்டு வீசிட்டார்.

  • ஒரு முறை ரஷ்ய நாட்டுத் தலைவர் போலந்துக்கு சென்றிருந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் முறையில் 24 பீரங்கிகள் முழங்கின. அவற்றின் முழக்கம் முடிந்த பின்பு ஒரு மூதாட்டி சுட்டவர்களை அணுகி காரணம் கேட்டார்.

    ரஷ்ய தலைவர் வந்திருக்கிறார் அதற்காகத்தான் சுட்டோம் என்றார் ராணுவ வீரர்கள்.

    இத்தனை தடவை சுட்ட பிறகும் உங்கள் குறி தவறிவிட்டதே என்று பதில் கூறினாள் அந்த மூதாட்டி.

  • பால் விலையை கூட்டப்போறேனுங்க

    ஏம்பா?

    அவ்வளவு தண்ணீர் கஷ்டம்.