நகைச்சுவை - 7


  • நூல் வியாபாரிக்கு பெண்ணை தரமாட்டேன்னு சொல்றீங்களே ஏ ன்?

    அதுல பல சிக்கல்கள் இருக்கு...!

  • சுண்டல் கார பையன் என்னங்க சொல்லிட்டு போறான்?

    இது ஒரு பிகருன்னு, கூப்பிட்டு வந்து உச்சி வெயில்ல பீச்ல உட்கார்ந்திருக்கீங்கேள, இது பிழைப்பான்னு கேட்குறான்.

  • நேத்து திருடன் வந்து உங்கள் வீட்டு கதவை தட்டினானா, ஏன்,

    காலிங் பெல் இல்லை. அதனால் தான்.

    அவர் ஏன் அந்த பொண்ணை அப்படி முறைச்சி பார்க்கிறார்?

    அவர் தான் முறை மாப்பிள்ளையாம்.

  • எங்கள் தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்கேள

    ஏன்? அவர் பெரிய வயலினிஸ்டா?

    இல்லை. அவருக்கு வயலின் வாசிக்கத் தெரியாது.

  • வீரப்பன் உபேயாகிக்கும் சோப்?

    மைசூர் சாண்டல்சோப்...!

  • மரியாதை இல்லாத பூ எது

    வாடா மல்லி.

  • டாக்டர் நான் எதைப் பார்த்தாலும் இரண்டு இரண்டாக தெரியுது.

    சரி, அந்த சோபாவில் போய் உட்காருங்க.

    இரண்டு சோபா இருக்கே டாக்டர் எதுல உட்காரனும்?

  • நீச்சல் கற்றுக் கொடுக்கும் நிறுவனத் ஏன் அவர் ஆடி விட்டாரா?

    ஏகப்பட்ட கடனில் மூழ்கிவிட்டார்.

  • ஏன் குடிச்ச?

    ரொம்ப கவலையாய் இருந்தது அதான் குடிச்சேன்

    அப்படி என்ன கவலை?

    நான் ரொம்ப குடிக்கிறேன் என்று.

  • டென்சன் அதிகமானால் என்னவாகும்?

    லெவன் சன் ஆகும்.