டீ கடை நகைச்சுவை


  • மளிகை கடைக்காரரை கட்டிக்கிட்டது தப்பா போச்சு?

    ஏன்?

    கிஸ் கேட்டா எத்தனை கிலோன்னு கேட்கிறார்...!

  • அவர் ஆற்ற வேண்டிய வேலை நிறைய இருக்கா, யார் அவர்?

    டீ கடையில் டீ ஆற்றுபவர்.

    நான் எப்பவும் சீப்பாதான் வியாபாரம் பண்ணுவேன்.

    எப்படி கட்டுபடியாகும்?

    கட்டுபிடியாகுங்க வாழைப்பழத்தை சீப்பாதானே கொடுத்தாகணும்.

  • டீ குடிச்சதும் டம்ளரை கழுவறீங்க?

    டிபன் சாப்பிட்டு காசில்லைன்னா, மாவட்டறதில்லையா, அது மாதி ரி தான் சார்...!

  • ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சி.

    ஏன்.

    எப்பபார்த்தாலும் எடையை குறை எடையை குறை என்கிறார்.

  • ரேஷனுக்கு, பேஷனுக்கும் என்ன ஒற்றுமை?

    ரேஷனில் எடை குறையும்.

    பேஷனில் உடை குறையும்.