நகைச்சுவை - 4


  • இவருக்கு நான் பொண்ணுதர்றேன். நீ பொண்ணு தர்றேன்னு பயங்கர போட்டி

    அப்படி என்ன வேலை செய்றாரு?

    தண்ணீர் லாரி வச்சிருக்காரு.

  • குடி குடியை கெடுக்கும் படம் என்னாச்சு?

    ஊத்திக்கிச்சு

    கப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது?

    ஏன்?

    கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்கடி முடியாதே.

  • டி.வி. வாங்கினால் 20 கைக்குட்டைகள் இலவசமாக கொடுக்கிறா ர்களே ஏன்?

    மெகா சீரியல் பார்க்கும் போது வரும் கண்ணீரை துடைக்கதான்.

  • ஆட்டோவில் பயணம் செய்த கிராமவாசி மீட்டரில் 30ரூ காட்டிய போதும் 15ரூ தான் தந்தார் ஏன்?

    டிரைவரும் ஆட்டோவில் வந்ததால் 50-50 பாதி பாதி.

  • உன் பல்லழகைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல் இருக்குன்னு என் காதலிகிட்டே சொன்னது தப்பாப் போச்சு

    என்னவாம்?

    பார்த்துகிட்டே இருங்கன்னு சொல்லி பல்செட்டை கழட்டி என் கையில கொடுத்துக்கிட்டு போயிட்டார்.

  • குடி குடியைக் கெடுக்குமாடா?

    நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும் நான் வாங்கிக் கொடுத்தா என் குடி கெடும்.

  • 100 வயதுவரை வாழ்வது எப்படிங்கற புத்தகத்தை கொடுத்தவரை திட்றாரே ஏன்?

    அவர்க்கு வயது 102.