நகைச்சுவை

ஒருவர் :- நம்ம மேனேஜர் அரை மணி நேரத்துக்கு முன்பு எல்லோர்கிட்டயும் பேசிச் சிரிச்சுக்கிட்டு இருந்தாரே, இப்ப ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழறார்?

மற்றவர் :- 10 நிமிஷத்துக்கு முன்பு அவரோட மனைவி போன்ல பேசினார். அவ்ளோதான் ஆள் வெறி பிடிச்சவர் மாதிரி ஆயிட்டார்

--------------------------------------------------------------------------------------------------------
பக்கத்து தியேட்டரிலே ஆட்டுக்கார அலமேலு படத்தை ஏன் எடுத்துட்டாங்க?

நம்ம தியேட்டரிலே பாயும் புலி ஓடுதுல்லே.

-------------------------------------------------------------------------------------------------------
முனாறு பார்த்து இருக்கீங்களா ? இல்லையா ? நான் காட்டவா?

666 என்ன ஓகே வா ......

அரசியல் நகைச்சுவை - 4

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நன்பனும்
இல்லைன்னு சொன்னது தப்பாபோச்சு?

ஏன் ?

நிரந்தர பதவியும் இல்லைன்னு சொல்லி சீட் தரலை!

----------------------------------------------------------------------------------------------------

அரவிந்த் சாமிக்கும், ஆற்காடு வீராசாமிக்கும்
சின்ன வித்தியாசம்தானா... எப்படி?'
'அவர் வந்தது மின்சார கனவு...இவர் வந்ததும்
மின்சாரமே கனவு!'

----------------------------------------------------------------------------------------------------

சார்... உங்க தொகுதிக்காரர் ஒருத்தர் கடிதம் அனுப்பியிருக்கார் !

என்னவாம் ?

நிலம் நிலமறிய ஆவல்னு !

----------------------------------------------------------------------------------------------------

தலைவர் கோபமா இருக்காரே, என்னாச்சு ?

தன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு தலைவர் சொன்னதை, சன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு பிரசுரம் செய்துட்டாங்களாம் !
----------------------------------------------------------------------------------------------------

தலைவருக்கு சீட் கிடைச்சதில் தலைக்கால் புரியலை !!

என்ன ?

கழுத்தில விழுந்த மாலையை கழட்டி வீசுரதுக்கு பதிலா
வேட்ட்யியை அவிழ்த்து வீசுறாரே !....

சர்தார்ஜியிடம் இன்டர்வியூ

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான். முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார்.

அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.

சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!

சிரிப்பு வருது - 1

அந்த நடிகரைக் கட்சியில சேர்த்தது தப்பாப்போச்சு'

'ஏன் என்னாச்சு?'

'ஒன் டே முதல்வராகணும்னா எந்தத் தொகுதியில நிக்கணும்னு கேக்குறாரு!'.

-------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தக் கதையை சினிமாவா எடுக்க நான் பத்து வருஶம்
தவம் இருந்தேன் !'

ஏன் ?

'இதே கதையை வெச்சு, இதுக்கு முந்தி வந்த படத்தை ஜனங்க
மறக்க வேணாமா ?

-------------------------------------------------------------------------------------------------------------------------------

என்னங்க இது..... இன்றைய ஸ்பெசல் ரண்டக்க கூட்டு... ரண்டக்க சாம்பார்னு எழுதியிருக்கு?'

'ஹி ஹி வெண்டக்காயத்தான் அப்படி சீஸனுக்கேத்த மாதரி எழுதி இருக்கோம்!'

-------------------------------------------------------------------------------------------------------------------------------

எங்க வீட்ல எல்லோரும் தனித்தனியாதான் சினிமாவுக்கு போவோம்....

ஏன் ?

இப்பதான் குடும்பத்தோடு பார்க்கிறமாதிரி சினிமாவே வர்றதில்லையே

-------------------------------------------------------------------------------------------------------------------------------

டீ குடிக்க...
டீ குடிக்க...
துட்டு கொடுடா....

குடிக்கிறதே ஓசி டீ...பஞ்சித்திலேயும் பந்தாவுக்கு குறச்சலில்லை !