கடி ஜோக்ஸ் (9-9-2010)

இந்தப் படத்துல அடிக்கடி மதியச் சாப்பாட்டைப் பற்றியேகதாநாயகன் வசனம் பேசறாரே...

ஏன்?.

அது லஞ்ச் டயலாக்காம்..

=============

தொப்பையைப் பார்த்து ஜோசியம் சொல்றாரே... யார் அவர்?

அவர் போலீசுக்கான ஸ்பெஷல் ஜோசியராம்..!

=================

‘மன்னா... உங்களுக்குச் சொந்தமான பகுதியைக் கைப்பற்ற, எதிரி மன்னர்கள் மோதிக்கொள்கிறார்கள்! எனக்குச் சொந்தமான பகுதியா... எது அது?’’‘

‘உங்கள் முதுகுதான் மன்னா!


=================

எதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி கொண்டு வந்து வைக்கிறே..!

நீங்கதானே மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டப்போறேன்னு சொன்னீங்க..?============

என்னதான் ஸ்டன்ட் மாஸ்டர் மகனா இருந்தாலும், வேலைக்கு அப்ளை பண்றப்போ... அப்ளி கேஷன் கூட ரெஸ்யூம் தான் வைக்கவும்; டிஷ்யூமை வைக்க முடியாது!

சண்டையை வைத்து மண்டையை பிய்த்துக் கொண்டு சண்டேயில் தத்துவம் எழுதி, மண்டே போஸ்ட் செய்வோர் சங்கம்.