நகைச்சுவை - 15


 • இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கும்?

  எல்லா பெட்ரோல் பங்கிலும் கிடைக்கும்.

 • நீ மீன் பிடிக்க போனப்ப புதுசா ஒரு தீவை கண்டுபிடிச்சியா அப்புறம் என்ன செஞ்ச?

  பிளாட்டுகள் விற்பனைக்குன்னு போர்டு வெச்சிட்டு என் போன் நம்பர் எழுதிட்டு வந்துட்டேன்.

  எங்க வீடு கோயில் மாதிரி....

  அதுக்காக வீட்டு வாசல்ல உண்டியல் எல்லா வைக்கணுமா...?

 • அந்த கிராமத்தில் எங்க பார்த்தாலும் குண்டுசியா இருக்கு ஏன்?

  அது மிகவும் பின்தங்கிய கிராமம்.

 • பைத்தியம் 1 - தாஜ்மஹாலை நான் வாங்கப்போறேன்?

  பைத்தியம் 2 - அதை நான் இப்ப விக்கமாட்டேன்.

 • ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!

  என்னாச்சி?

  போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி

 • உங்களை நம்பி எப்படி கடன் தர்றது?

  உங்களை நம்பி நான் கடன் கேட்கிறேனே அப்படித்தான்...!

 • அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?

  அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்.

 • எங்க தம்பி பயங்கர ஓடுவான், அமெரிக்கா எல்லாம் போயிருக்கான்

  ஓடியேவா?

 • ஜோதிடர்லிலே இவர் தான் பெரிய...

  சக்கரவர்த்தியா?

  இல்ல புளுகர்.

 • டேபிள் எப்ப வெட்கப்படும்?

  அதன் டிராயரை இழுத்தால்.

  நகைச்சுவை - 14

 • சர்தாஜிக்கு அவனது மனைவிக்கும் ஓயாத சண்டை கோபம் தலைக்கேறி சர்தாஜி கடவுளை நோக்கி உரத்த குரலில் ஏ கடவுளே இந்த உலகத்திலிருந்து என்னை அழைத்துக் கொள்... என்று வேண்டினான்.

  சர்தாஜியின் மனைவியும் இந்த கோரிக்கையை வைத்தாள். ஏய் கடவுளே என்னை உலகத்திலிருந்து முதலில் அழைத்துக் கொள்.

  சர்தாஜி யோசித்துவிட்டு மீண்டும் கடவுளிடம் வேண்டினான். கடவுளே, என் மனைவியின் கோரிக்கையை முதலில் நிறைவேற்று.

  வெயிட்டான பறவை எது?

  கருடன்

 • எனக்கு ஒரு மொட்டை கடுதாசி வந்திருக்கு

  எங்கிருந்து?

  பழனியிலிருந்து.

 • பன் மேலே தண்ணீர் ஊத்தினால் என்ன ஆகும். தெரியலையே?

  பன்னீர் ஆகும்.


  நகைச்சுவை - 13


 • நான் 5 ரூபாயோட சென்னைக்கு வந்தேன்.

  அப்படியா?

  இன்னொரு 5 ரூபாய் கொடு திரும்பி கிராமத்துக்கே போய் விடுகிறேன்.

 • பேச முடியாத வாய் எது?

  செவ்வாய்

  உங்க பட்டாசு கடை எப்படி தீப்பிடிச்சது?

  மழை பெஞ்சதால, கடைக்குள்ள தீமூட்டி குளிர் காய்ஞ்சேன்.

 • உட்கார முடியாத தரை எது?

  புளியோதரை.

 • காக்கா ஏன் கறுப்பா இருக்கு?

  அது வெயிலில் சுற்றுவதால்.

 • எல்லா ஒட்டப்பந்தயதுல நீங்க ஜெயிச்சிடுகிறிகளே, எப்படி?

  என்னை கடன்காரங்க துரத்துறதாநெனைச்சுபேன், அப்புறம் வெற்றிதான்.

 • மாப்பிள்ளை அழைப்பு எங்கியிருந்து ஆரம்பம்!

  சென்டரல் ஜெயிலில் இருந்து.

 • உங்க வீட்டு வேலைக்காரிக்கு மட்டும் அம்பது ரூபா அதிக சம்பள ம் தர்றியாமே எதுக்கு?

  பக்கத்து வீட்டு நியூஸை எல்லாம் கேஸெட் பதிவு பண்ணி கொடுத்துவாளே

 • தபால்காரர் கீழே விழுந்தால் எப்படி விழுவார்?

  தபால்ன்னு தான்.

 • ராமுவும், சோமுவும் குலப்பெருமை காரணமாக வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

  ராமு சூயஸ் கால்வாயை கேள்விப்பட்டிருக்கிறாயா?

  சோமு ஏன் இல்லை. நன்றாகத் தெரியும். எகிப்தில் உள்ளது.

  ராமு அதை தோண்டியதே என் அப்பாதான்.

  சோமு இதென்ன பெரியசாதனை? நீ இறந்த

 • கையில் கட்டையோடு எப்போதும் அலைகிறாரே அவர் யார்?

  கட்ட பிரம்மச்சாரி

 • கடல் பக்கத்தில் லைட் ஹவுஸ் கட்டிருக்கிறார்கள் ஏன்?

  லைட் ஹவுஸ் பக்கத்தில் கடலை கட்ட முடியாது அதான்.

  நகைச்சுவை - 12


 • எங்கு விழுந்தால் அடிபடாது?

  போட்டாவில்

 • காக்காவுக்கு ஊரெல்லாம் கடன் தன் குஞ்சை அடமானம் வைக்குதா, எப்படி?

  காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு.

  என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.

  இப்பவாது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு.

 • இன்னிக்கு பேங் லீவு. இல்லைன்னா பணம் கிடைச்சிருக்கும்.

  பேங்க்ல அக்கௌண்ட் வெச்சிருக்கியா...?

  ம்ஹூம் பேங்க் கிளார்க் கிட்ட கடன் வாங்குவேன்.

 • வானத்தில் 3 கிளி பறந்து கொண்டிருந்தது முதல் கிளி தன் பின்னால் 2 கிளி வருவதாகக் கூறியது. 2 வது கிளியும் தன் பின்னாள் 2 கிளி வருவதாக கூறியது. 3 வது கிளியும் தன் பின்னாள் 2 கிளி வருவதாக கூறியது எப்படி?

  கிளிகள் எப்போதும் சொன்னதே சொல்லும்.

 • உடுத்திக் கொள்ள முடியாத டிரஸ் எது?

  'Addres'

 • பெண் பார்த்து வந்த பின் அவன் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.

  துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்று யாரோ சொன்னாங்களாம்.

 • பூவில் அதிர்ச்சி கொடுக்கும் பூ எது?

  பாம்பு

 • இவர் பழக இனிப்பானர்

  என்ன செய்றார்?

  ஸ்வீட் கடை வச்சிருக்கார்.

 • ஜட்ஜ் சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?

  திருடன் ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டி க்கிட்டேன்.

 • ஏன் பூனைக்கு காது வழியா பால் கொடுக்கிறீங்க?

  அது வாயில்லா ஜீவன்.

 • பிடிவாதம் பிடிக்கும் ஊர் எது?

  சண்டிகர்.

 • சச்சின் அடிக்காத ரன்?

  சிம்ரன்

  மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு...- அம்மா

  ண்ணா! ராஜா! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீ ஒரே பையனாகப் பிறந்து வளர்ந்து, படித்துப் பட்டம் பெற்று கைநிறையச் சம்பாதிச்சு... இப்படி ஒவ்வொர காலகட்டத்திலும் உன் வளர்ச்சியை, உயர்வைக் கண்டு பூரித்திருக்கிறோம்.

  திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப் படட்டும் என்று நீ சொன்னதனால்தான் இந்த ஏற்பாடுகள். நல்ல பெண், நல்ல குடும்பம்.. நல்லதே எண்ணுவோம்...! நல்லதே நடக்கட்டும். உலக நடப்பினைக் கண்டு உன் அப்பாவும் நானும் நிறையப் பேசிய பிறகுதான், திருமணம் ஆவதற்கு முன்னால் உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். இது உனக்கு வியப்பாக இருக்கலாம். பெண்ணுக்குத்தானே இப்படிச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறாயா? இல்லை கண்ணா... நாங்கள் மனம் திறந்து சொல்வதைச் சொல்லி விடுகிறோம். காதில் போட்டு வைத்தால் சில விஷயங்கள் மனதிலும் இறங்கும். அதுவே தக்க சமயத்தில் உதவக்கூடும்!

  பெஸ்ட் அம்மா பெஸ்ட்!

  இதுவரையில் பெண்ணென்று வீட்டில் உன் அம்மாவை மட்டுமே பார்த்திருக்கிறாய். அவள் சமைப்பதையும், வீட்டை வைத்துக் கொள்வதையும், பாடம் சொல்லித் தருவதையும் பாடுவதையும், கோலம் போடுவதையும், பண்டிகைகளை முழுமையாகக் கொண்டாடுவதையும் எதிலும் திறம்பட எடுக்கும் முடிவையும் பார்த்து என் அம்மாதான் பெஸ்ட் என்று எண்ணியதில் தப்பில்லை. உள்ளூர எனக்கு அது பெரிய கிரீடம்தான்!

  இனிமேல் அதையே மனதில் அசைபோடாதே! அதைத் தாண்டி வா! அம்மா பெஸ்ட் என்ற உன் கருத்தை உள்ளத்தின் ஆழத்தில் மட்டும் வைத்துக்கொள். வார்த்தைகளில் உன்னவளுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. தாய் சொல்லைத் தட்டாதே! சிறிய முகமூடிதான். அதைத் திறம்படப் பயன்படுத்து! அது எல்லோரையும் மகிழ்விப்பதைப் புரிந்துகொள்வாய்.

  தாய்க்குப் பின் தாரம்!

  நலங்கு மஞ்சள் காயும் முன்பே பிரம்மதண்டத்தைத் தலையில் வைத்தது போல் எங்க அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்., அவர்களை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற வசனங்களைப் பேசாதே! அப்படிச் சொன்னால் அவளுக்கு மனதில், அப்படியானால் அம்மா பிள்ளையாகவே இருக்க வேண்டியதுதானே. அப்புறம் எதுக்கு நான்? என்று சிறு கசப்பு உணர்வு தோன்றும். அவள்தான் உன் உலகம் என்பதை அவளுக்குப் புரியவை. அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்றும் சொல்லாதே! அதையே என்றாவது உன் மீது திருப்பக் காரணமாக நீ இருக்கக்கூடாது. சண்டையில்லாவிட்டால் நீ கேட்டதெல்லாம் கிடைத்திருக்குமா?

  காபியை சர், புர் என்று உறிஞ்சிக் குடிக்காதே. உனக்கொரு மனைவி வந்தால், நல்லா வளர்த்திருக்கா என்று என்னைக் குறை சொல்வாள் என்று அடிக்கடி சொல்வேனே. இன்று உன்னுடைய நடை உடை பாவனையில் உயர்வைக் கண்டு நான் பூரிக்கிறேன். வரப் போகிறவள் பெருமையடைவாள். நல்ல ஆசானாகப் பணி ஆற்றிய நிறைவு எனக்கு.

  தாயா? தாரமா?

  அம்மா சமையலைத் தவிர வேறொன்றும் நீ அறியாததால் அது மிக உயர்வாக உனக்குத் தோன்றுவதில் வியப்பில்லை. இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை, எங்க அம்மா செய்கிற மாதிரி சேப்பங்கிழங்கு ரோஸ்ட், முருங்கைக்காய் சாம்பார் மாதிரி வராது என்று ஒப்பிட்டுப் பேசாதே! உன் அம்மாவுக்கு உன் மனைவியாகப் போகிற பெண்ணைப் போலக் கார் ஓட்டவும், வங்கிப் பணி ஆற்றவும், டைம் மேனேஜ்மெண்ட்டும் தெரியாதப்பா! நான் அன்றைய கெட்டிக்காரி! இவள் இன்றைய மங்கை!

  அம்மாவின் கட்டளைகள் ஆறு!

  உனக்கு உன்னிடம் உள்ள பேரன்பை மனதில் கொண்டு நான் சொல்லும் அறிவுரைகள் ஆறு:

  1. அம்மா புராணம் பாடாதே!

  2. அம்மாவோடு ஒப்பிடாதே!

  3. அம்மாக் கோண்டு என்ற பட்டம் பயன் தராது!

  4. அம்மாவைக் கொஞ்சம் பீடத்திலிருந்து இறக்கி வை. அவளும் சற்று இளைப்பாறட்டும்!

  5. அம்மா தேவைப்பட்டபோதெல்லாம் உதவிக்கு வருவாள் என்பதை மட்டும் சொல்லி வை!

  உன்னவளுடைய அம்மாவையும் மதிக்கக் கற்றுக் கொள்!

  பி.கு.

  மாமனாரை உயர்த்திப் பேசுவதால் மருமகளுக்கு எந்தவித கசப்பும் ஏற்பட்டதாகச் சரித்திரமே கிடையாது! ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி... நீடூழிவாழ வாழ்த்துக்கள்

  நகைச்சுவை - 11


 • தெய்வ காரியத்துல ஈடுபட்டப்ப, என்னை போலிஸ் கைது பண்ணி டுச்சு.

  அப்படியென்ன பண்ணுனீங்க..?

  சாமி சிலையை பெயர்த்து எடுத்துக் கிட்டிருந்தேன்.

 • நீங்க யாரு என்ன சொன்னாலும் ஆமான்னு சொல்வீங்களா?

  ஆமா

  கோழி ஏன் முட்டை போடுது?

  அதுக்கு 1,2,3, தெரியாது அதான் முட்டை போடுது,

 • இடுக்கண் வருங்கால் நகுக

  சார் இடுக்கண் நமக்கு வரும் போதா மத்தவங்களுக்கு வரும் போதா?

 • பார்க்கில் உட்கார்ந்து பேசினால் எப்படி இருக்கும்?

  புல்லரிக்கும்

 • உங்க நாட்டியப்பள்ளியில் மட்டும் என்பொண்ணு ஆடோ ஆடுன்னு ஆடறா... ஆனா வீட்டில் அப்படி ஆடலையே.... என்ன காரணம்?

  ஏற்கனேவ இரு சாரயக்கடை இருந்த இடமாச்சே

 • பிரிட்ஜில் தக்காளி வைக்கிறாங்கேள, ஏன்?

  தக்காளியில் பிரிட்ஜை வைக்க முடியாது

  நகைச்சுவை - 10


 • 5ல் 7 போகுமா?

  பக்கத்தில் கடன் வாங்கினால் போகும்.

 • அவார்டு கொடுத்திருக்காங்க ஒரு ஊருக்கு

  என்ன ஊரு....?

  விருதுநகர்

  என் வாழ்க்கையே இருண்டு போச்சு கமலா

  ஏங்க, என்னாச்சு?

  எனக்கு நிரந்தரமா நைட்டூட்டி போட்டுட்டாங்க

 • குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்னு சொல்லு?

  தெரியைலேய?

  குளிக்கும் போதே துவட்ட முடியாதே.

 • கோழி ஏன் முட்டை போடுது?

  அதுக்கு 1,2,3, தெரியாது அதான் முட்டை போடுது,

 • தெய்வ காரியத்துல ஈடுபட்டப்ப, என்னை போலிஸ் கைது பண்ணி டுச்சு.

  அப்படியென்ன பண்ணுனீங்க..?

  சாமி சிலையை பெயர்த்து எடுத்துக் கிட்டிருந்தேன்.

 • நீங்க யாரு என்ன சொன்னாலும் ஆமான்னு சொல்வீங்களா?

  ஆமா