நகைச்சுவை - 12


 • எங்கு விழுந்தால் அடிபடாது?

  போட்டாவில்

 • காக்காவுக்கு ஊரெல்லாம் கடன் தன் குஞ்சை அடமானம் வைக்குதா, எப்படி?

  காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு.

  என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.

  இப்பவாது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு.

 • இன்னிக்கு பேங் லீவு. இல்லைன்னா பணம் கிடைச்சிருக்கும்.

  பேங்க்ல அக்கௌண்ட் வெச்சிருக்கியா...?

  ம்ஹூம் பேங்க் கிளார்க் கிட்ட கடன் வாங்குவேன்.

 • வானத்தில் 3 கிளி பறந்து கொண்டிருந்தது முதல் கிளி தன் பின்னால் 2 கிளி வருவதாகக் கூறியது. 2 வது கிளியும் தன் பின்னாள் 2 கிளி வருவதாக கூறியது. 3 வது கிளியும் தன் பின்னாள் 2 கிளி வருவதாக கூறியது எப்படி?

  கிளிகள் எப்போதும் சொன்னதே சொல்லும்.

 • உடுத்திக் கொள்ள முடியாத டிரஸ் எது?

  'Addres'

 • பெண் பார்த்து வந்த பின் அவன் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.

  துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்று யாரோ சொன்னாங்களாம்.

 • பூவில் அதிர்ச்சி கொடுக்கும் பூ எது?

  பாம்பு

 • இவர் பழக இனிப்பானர்

  என்ன செய்றார்?

  ஸ்வீட் கடை வச்சிருக்கார்.

 • ஜட்ஜ் சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?

  திருடன் ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டி க்கிட்டேன்.

 • ஏன் பூனைக்கு காது வழியா பால் கொடுக்கிறீங்க?

  அது வாயில்லா ஜீவன்.

 • பிடிவாதம் பிடிக்கும் ஊர் எது?

  சண்டிகர்.

 • சச்சின் அடிக்காத ரன்?

  சிம்ரன்