நகைச்சுவை - 15


 • இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கும்?

  எல்லா பெட்ரோல் பங்கிலும் கிடைக்கும்.

 • நீ மீன் பிடிக்க போனப்ப புதுசா ஒரு தீவை கண்டுபிடிச்சியா அப்புறம் என்ன செஞ்ச?

  பிளாட்டுகள் விற்பனைக்குன்னு போர்டு வெச்சிட்டு என் போன் நம்பர் எழுதிட்டு வந்துட்டேன்.

  எங்க வீடு கோயில் மாதிரி....

  அதுக்காக வீட்டு வாசல்ல உண்டியல் எல்லா வைக்கணுமா...?

 • அந்த கிராமத்தில் எங்க பார்த்தாலும் குண்டுசியா இருக்கு ஏன்?

  அது மிகவும் பின்தங்கிய கிராமம்.

 • பைத்தியம் 1 - தாஜ்மஹாலை நான் வாங்கப்போறேன்?

  பைத்தியம் 2 - அதை நான் இப்ப விக்கமாட்டேன்.

 • ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!

  என்னாச்சி?

  போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி

 • உங்களை நம்பி எப்படி கடன் தர்றது?

  உங்களை நம்பி நான் கடன் கேட்கிறேனே அப்படித்தான்...!

 • அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?

  அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்.

 • எங்க தம்பி பயங்கர ஓடுவான், அமெரிக்கா எல்லாம் போயிருக்கான்

  ஓடியேவா?

 • ஜோதிடர்லிலே இவர் தான் பெரிய...

  சக்கரவர்த்தியா?

  இல்ல புளுகர்.

 • டேபிள் எப்ப வெட்கப்படும்?

  அதன் டிராயரை இழுத்தால்.