மாங்கா மடையன சிங்கம் கடிச்சா , என்ன செய்யும்???

சொந்த ஊர் எது???

அந்தளவுக்கெல்லாம் நமக்கு வசதி இல்ல...சொந்த வீடுதான் இருக்கு...

---------------------------------------------------------------

மாங்கா மடையன சிங்கம் கடிச்சா , என்ன செய்யும்???

தின்னுடும்...

இல்ல புளிக்குதுன்னு துப்பிட்டு ஓடிடும்....

---------------------------------------------------------------

நாம நினைப்பதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்???

தெரியலயே...

ட்ராஃபிக் ஜாம் ஆகிடும்...

---------------------------------------------------------------

உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே..உங்களுக்கு தெரியுமா???

எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதே..

---------------------------------------------------------------

மன்னர்: நம் அரசவை நகைச்சுவையாளரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடுகிறேன்!

ஏன் மன்னா?

எனக்கு எஸ்.எம்.எஸ்.களிலேயே நிறைய கடி ஜோக்குகள் வருகின்றன. பின்பு அவர் வேறு எதற்கு?