ஊழல் செய்தா செய்தா எப்படி எஸ்கேப் ஆகணும்?

அவரை எம்.பி ஆக்கினது தப்பாப் போச்சா..?

சின்ன வீட்டு பிச்சினைக்கு மூணு நாளா, சமைக்க விடாமே வீட்டு கிச்சன்லே கூச்சல் போட்டுட்டிருக்காரு...!

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தலைவரு ரொம்ப விவரமான ஆளுன்னு எப்படி சொல்றே?

நில அபகரிப்பு வழக்கில் அந்தக் காலத்திலிருந்தே விசாரணை வைக்கணுமாம்...!

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாலிடிக்ஸ்லேயிருந்து ரிடையர் ஆயிட்டீங்க...அடுத்து நீங்க என்ன செய்ய ஐடியா?

ஊழல் அகாமி ஸ்டார்ட் பண்ணி, எப்படி 'எஸ்கேப்' ஆகணும்னு சொல்லிக் கொடுக்கப் போறேன்...!

பிரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்

1. மேசையை எப்போதும் களேபரமாக வைத்திருங்கள். ஐந்தாறு பைல்கள் திறந்து கிடக்க வேண்டும். நடுவில் பேனாவைத் திறந்து போட்டிருக்க வேண்டும். மேசையின் இழுப்பறைகள் பாதி திறந்திருக்க வேண்டும். சாவி தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

2. போனில் உரக்க பேசுங்கள். ‘ஐ சிம்ப்ளி கேன்னாட் டாலரேட் தட்’,டுமாரோ வில் பீ டூ லேட்’, என்கிற மாதிரி வாக்கியங்களை அழுத்தம் திருத்தமாக உச்சரியுங்கள். ஆங்காங்கே கொஞ்சம் ஹிந்தி, மலையாளம் கலந்து பேசுவது குணச்சித்திரத்தை மேம்படுத்தும். எதிராளியைக் காய்ச்சி வடிகட்டுற மாதிரி பேசுங்கள். இதைச் செய்கிற போது எதிர் முனையில் போன் வைக்கப் பட்டுவிட்டது என்பதை நிச்சயித்துக் கொண்டு செய்வது உடம்புக்கு நல்லது.

3. அலுவலகத்துக்குள் எப்போது நடந்தாலும் ஏதோ தீ விபத்து நடந்து விட்டது மாதிரி வேகமாக நடவுங்கள். நீங்கள் போவது கேன்டீனுக்கு மசால் வடை சாப்பிடவோ அல்லது கார்டனிங்கில் வேலை செய்யும் பெண்ணை சைட் அடிக்கவோ கூட இருக்கலாம்.

4. மேற்சொன்ன தீ விபத்து நடைகளின் போது கையில் எப்போதும் ஒரு பைலோ, ரெஜிஸ்டர் புக்கோ வைத்திருங்கள். அது காலி பைலாகவோ, அந்த ரிஜிஸ்தர் உங்கள் மகனின் மேப் டிராயிங் நோட்டாகவோ கூட இருக்கலாம்.

5. சாயந்திரம் ஐந்தரைக்குப் பிறகு உங்கள் பாஸின் கேபினுக்கு முன்னால் குறுக்கும் நெடுக்கும் சும்மாவாவது நடவுங்கள்.

6. ஒரு வேளை அவர் ஏற்கனவே கிளம்பியிருந்தால் அவர் நம்பருக்கு போன் செய்து உப்புப் பெறாத விஷயம் எதற்காவது ஐடியா கேளுங்கள். ‘ஆர் யு ஸ்டில் இன் தி ஆபிஸ்?’ என்று கேட்க வையுங்கள். அதற்கு பதிலாக, ‘யுஷுவலா கிளம்பற நேரமே இன்னம் வரல்லை சார்’ என்கிற ரீதியில் பதில் சொல்லுங்கள். முடிந்தால், ‘கேசவன் வேறே இன்னைக்கு வரல்லையா, நாளைக்கு ஆடிட் இருக்கே… என்கிற மாதிரி யாரையாவது டிப்ளமேடிக்காக போட்டுக் கொடுங்கள்.

7. அடுத்த நாள் பாஸுடன் பேசும் போது சம்பந்தமே இல்லாமல் ‘நேத்து கூட சாயந்திரம் ஆறரை மணி இருக்கும், வெப் இந்தியா ஆளுங்க போன் பண்ணாங்க’ என்கிற மாதிரி அப்டேஷன்கள் கொடுங்கள். ஆறரை, ஏழு என்கிற இடங்களில் இழுத்து இழுத்து பேசுங்கள்.

ஆங்கிலத்தை இப்படி கூட கத்துக்கலாமா ?

நாமெல்லாம் ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும்போது A for APPLE, B for BALL, என்று தான் சொல்லித் தந்தார்கள். ஆனால் இப்போது இணையம் மூலமாக பல சமூகவலைத் தலங்கள் பெருகி விட்டதினால் இனி ஆங்கிலம் இப்படித்தான் சொல்லித் தருவார்களோ?

A : ALEXA

B : BLOG

C : CHAT

D : DOWNLOAD

E : EMAIL

F : FACEBOOK

G : GOOGLE

H : HEWLETT PACKARD(HP)

I : I PHONE

J : JAVA

K : KINGSTON

L : LAPTOP

M : MESSAGE

N : NERO

O : ORKUT

P : PICASSA

Q : QUICK HEAL

R : REAL PLAYER

S : SERVER

T : TWITTER

U : USB

V : VISTA

W : WINDOWS

X : XP

Y : YOU TUBE

Z : ZORPIA