அரசியல் நகைச்சுவை

நம்ம தலைவர் ஏன் உடம்பு இளைக்கிற மருந்தை வாங்கிட்டு
சாப்பிடாம இருக்காரு ?

நாளைக்கு அவருக்கு கட்சில எடைக்கு எடை தங்கம் தரப்போராங்களாம்


-----------------------------------------------------------------------------------------------------------------------

தலைவரே !.. எதிர்க்கட்சி தலைவருக்கு நீங்களே உங்க சொந்தச் செலவுல ஏன் சிலை வக்கிறீங்க ?

நடுரோட்ல உன்னை நிறுத்திக் காட்டறேன்னு சாவால் விட்டிருக்கேனே ?

-----------------------------------------------------------------------------------------------------------------------

மேடையில தலைவர் இப்படிப் பேசியிருக்க கூடாது.....

என்ன பேசினார் ?

தலைக்கு ஐம்பது வாங்கிக் கொண்டு லாரியில் ஏறி வந்திருக்கும்
ஜால்ராக்களேன்னு சொல்லிட்டாரு......

-----------------------------------------------------------------------------------------------------------------------

நம்ம தலைவரோட செல் நம்பர் இருபத்தாறு...

என்னது இரண்டு நம்பர்தானா ....?

நான் சொன்னது...... ஜெயில்ல அவரோட செல் நம்பர் !

-----------------------------------------------------------------------------------------------------------------------

தலைவருக்கு ஜீரன சக்தி அதிகம்னு சொல்லுறியே...... எப்படி ?

கோடி கோடியா முழுங்கிறாரே.... !

நகைச்சுவை

ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா?

தெரியாதே!

அட....இதுகூடப் புரியாம இருக்கியே மக்கு....
ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்.----------------------------------------------------------------------------------------------


உங்க மாமா டெல்லிக்குப் போனாரே...
அங்க என்னவா இருக்கார்?

அங்கேயும் எங்க மாமாவாத்தான் இருக்கார்.
----------------------------------------------------------------------------------------------
உங்கள் ஊரில் பெரிய மனிதர்கள் யாராவது
பிறந்திருக்கிறார்களா?

இல்லை, குழைந்தைகள்தான் பிறந்திருக்கின்றன.
----------------------------------------------------------------------------------------------


மகாபாரதத்திலே உட்கார்ந்துகொண்டே
இருந்தவர் யார்?

குந்தி தேவி!


----------------------------------------------------------------------------------------------


போஸ்ட்மேன் கல் தடுக்கி எப்படி விழுவார் ?

’தபால்’-ன்னு விழுவார் !

கடிகள்

பொண்ணு பார்க்க வந்த பையன் சொன்னத கேட்டதும் பொண்ணு வீட்டுக்காரங்க அவனுக்கு  பைத்தியம்னு  பொண்ணு  கொடுக்க  மாட்டேனுட்டாங்க. அவன்  அப்படி   என்ன  சொன்னான்? 
 ‘நான்  கொஞ்சம்  தனியா  பேசணும் .பரவாயில்லையா ?’ னு சொன்னான்.


--------------------------------------------------------------------------------------------------------------------
ட்ரெயின்  கண்டுபிடிக்கலன்ன  என்ன  ஆகி  இருக்கும் ?


 “தண்டவாளம்   (ரெயில்) வேஸ்ட்   ஆகி  இருக்கும்!”
------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு  அண்ணனும்  தங்கச்சியும்  ஓடி  வர்றாங்க. அண்ணன்  மேல்மூச்சு  வாங்கறான். தங்கச்சி? 
அவ  Female  மூச்சு  வாங்குவா.
---------------------------------------------------------------------------------------------------------
ஒரு  நாள்  கண்ணகியும்  கோவலனும்  பஸ்ல  போயிட்டு  இருந்தங்களாம் . அவங்க  ஸ்டாப்  வந்த  உடன  கோவலன்  எரங்கிட்டானாம் . கண்ணகி  மட்டும்  எரங்கவேமாட்டேன்னு  பிடிவாதம்  பிடித்தாங்கலாம் ஏன் ? கண்ணகி  படி  தாண்டாத பத்தினி  ஆச்சே  ! அதனால்  தான் இறங்கலே


ஜோக்ஸ்

தூக்க மருந்த சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல்
மருந்த சாப்பிட்டா இருமல் வருமா?


-------------------------------------------------------------------------------------------------------------

பள்ளிக்கூட டெஸ்ட்ல பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்ட்டிலையும் பிட் அடிக்கலாம் ஆனா பிலட் டெஸ்ட்ல பிட் அடிக்கலாமா?


-------------------------------------------------------------------------------------------------------------


தேள் கொட்டினால் வலிக்கும், பாம்பு கொட்டினாலும் வலிக்கும்,
ஆனா முடி கொட்டினால் வலிக்குமா?-------------------------------------------------------------------------------------------------------------


பல் வலி வந்தால் பல்லை புடுங்கலாம், ஆனா கை வலி வந்தால் கையை புடுங்க முடியுமா? 

கடி ஜோக்ஸ்

என்னப்பா... இது நேத்து சாப்பிட்ட காபி மாதிரி இருக்கு..?

இது ஜெராக்ஸ் காப்பி அதான்....

--------------------------------------------------------------------------------------------


உட்கார முடியாத தரை எது ?

புளியோதரை...

--------------------------------------------------------------------------------------------பிரபாகரனுக்கு (புலி) பிடிக்காத சோப்பு எது ?

சந்திரிக்கா சோப்புதான் !

--------------------------------------------------------------------------------------------

சொந்த ஊர் எது ?

அந்த அளவுக்கு வசதி இல்லீங்க.... சொந்த வீடுதான் இருக்கு !

--------------------------------------------------------------------------------------------மருமகள்: ஐயா! எனக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்திருக்கு?
போலிஸ்: யாரிடம் இருந்து?
மருமகள்:என் மாமியாரிடமிருந்து! உடனே கிளம்பி என் வீட்டுக்கு வ‌ராங்களாம்!

நகைச்சுவை

பஸ்சில்........

எங்கே போகனும் ?

அதோ ! சிவப்பு கலர் சேலை கட்டி இருக்கே அந்த பிகர் பக்கத்தில போகனும் வழி விடுங்க....

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


'எங்கம்மாவுக்கு மூச்சுவிட

ரொம்ப சிரமமா இருக்காம் கமலா !''அவ்வளவு சிரமப்பட்டு

எதுக்கு மூச்சு விடணும்னு கேக்கறேன் !'

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------நேத்து நீங்க ஏன் ஆபீசுக்கு லீவு போட்டீங்க ?'

'சொன்னா சிரிக்க கூடாது. எங்க பாட்டி செத்துப் போய்ட்டாங்க
நெஜம்மா...!'------------------------------------------------------------------------------------------------------------------------------------------------மன்னருக்கு சினிமா மோகம் பிடித்து ஆட்டுகிறது !'

'எப்படி ?'

'தன்னைப்பற்றி ஏதும் கிசுகிசு வந்திருக்கிறதா ? என்று கேட்கிறாரே !'

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------நான் தினமும் செல் போன்ல பாட்டு கேட்பேன், நீங்க ?

நானும் செல் போன்ல பாட்டு கேட்பேன். ஆனா என் மனைவிக்கிட்ட !

நடிகரெல்லாம் நாடாளா முடியுமா??????

'நடிகரெல்லாம் நாடாளா முடியுமா எனக் கேட்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கிறேன்'

'நாங்கள் நாடாள்வது இருக்கட்டும் உங்களால் ஒரு பாட்டுக்கு அசினுடன் ஸ்பீடா டான்ஸ் ஆட முடியுமா?'

----------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஒருவர்: ரஜினி மாதிரி வந்து காட்றேன்னு சொல்லிட்டு சென்னைபோன என் பையன் சொன்னமாதிரியே செஞ்சுகிட்டு இருக்கான்.

மற்றவர்: அப்படீன்னா ஹீரோ ஆயிட்டானா?

ஒருவர்: நீங்கவேற.....பஸ்ஸில கண்டக்டரா ஆயிருக்கான்.----------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் ’மசாலா’ படங்கள் எடுக்கறதில்லே?

வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.----------------------------------------------------------------------------------------------------------------------------------------


உங்களை வச்சு படம் எடுத்ததுலே என்னோட சொத்துல பாதி அழிஞ்சு போச்சு சார்....

கவலைப் படாதீங்க. உங்களுக்கு இன்னொரு படத்துக்கு நான் கால்சீட் தர்றேன் !

வேட்டைக்காரனை வேட்டையாடு

விஜயின்.அவ்வ்வ்வ்.மன்னிச்சுடுங்க சன் பிக்சர்ஸின் ...... வேட்டைக்காரனை டரியலாக்கி வந்த குறுஞ்செய்திகள் சில......
1. காதல் என்பது விஜய் படம் மாதிரி.பார்க்காதவன் பார்க்க துடிப்பான். பார்த்தவன் சாக துடிப்பான்
2.டைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடனும்
விஜய்: இல்லை 200நாள் ஓடனும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்
விஜய்: ங்கொய்யாலமுதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?
3.ரிப்போர்ட்டர் : சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்?
விஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.
4.முதல் பரிசு அடையார்ல பிளாட், ரெண்டாவது பரிசு கார்
போட்டி நடக்கும் இடம் சேப்பாக்கம் கிரவுண்டு.
தகுதி: எதையும் தாங்கும் இதயம்
போட்டி என்னன்னா விஜய் நடிச்ச ஒரு படம் பாக்கனும்
போட்டியின் விதிகள் : படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது,அவர் என்ன பண்ணினாலும் திட்டாம படம் பாக்கனும்...முக்கியமா உயிரோட இருக்கனும்


5.விஜய் அரசியலில் சேர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தன்னுடைய முதல் பட்ஜெட்டைஎப்படி தயாரிப்பார்.
-
-
ஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுப்பார்( ரீமேக்)
6.குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்
"விஜய" புடிச்சி காச கொடுத்து நடிக்க சொல்ற உலகம்
அது எப்படி நடிக்கும் ஐயா.. படம் எப்படி ஓடும் ஐயா?
7.விஜயின் அடுத்த 7 படங்கள்
வேட்டைக்காரன், சமையல்காரன், குடிகாரன்,பைத்தியக்காரன்,பிச்சைக்காரன்,குடுகுடுப்பைக்காரன்
8.டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..இனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது
விஜய்: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.
9. 140பேரைக் கொன்ற சதாமுக்கு தூக்குத்தண்டனை.6 கோடி பேரை கொல்ல வரும் வேட்டைக்காரன் விஜய்க்கு என்ன தண்டனை?.
10.எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?.
விஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.
எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா நீ என்ன கொல்ல பாக்குறியே.......
11.ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் வேட்டைக்காரன் வேளியாகும் தேதிய சொல்லலமட்றீங்க
விஜய்: சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் அதான் சொல்லலை

கம்யூட்டர் திருக்குறள்

பக் கண்டுபிடிப்பாரே ஒருத்தர் அவர்நாண‌


டிபக் செய்து விடல்.


எம்மொழி மறந்தார்க்கும் ஜாப்உண்டாம் ஜாபில்லை
சி மொழியை மறந்தவர்க்கு-----------------------------------------------------------------------------------------------------------
என்னதான் பெரிய பணக்காரனா இருந்தாலும்


ரயில் ஏற பிளாட்பார்ம் வந்துதான் ஆகனும்

-----------------------------------------------------------------------------------------------------------

சன்டே அன்னிக்கு சன்ட போட முடியும்


ஆனா மன்டே அன்னிக்கு மன்டைய போட முடியுமா?

-----------------------------------------------------------------------------------------------------------என்னாதான் பெரிய வீரனா இருந்தாலும்


வெய்யில் அடிச்சா திரும்ம அடிக்க முடியுமா?

கடி ஜோக்ஸ்

இட்டிலி மாவ வச்சி இட்டிலி சுடலாம்

ஆனா கடல மாவ வச்சி கடல சுட முடியுமா?-----------------------------------------------------------------------------


செருப்பு இல்லாம நாம நடக்கலாம்!

ஆனா நாம இல்லாம செருப்பு நடக்குமா?
-----------------------------------------------------------------------------

போலிஸ் : விபத்து எப்படி நடந்தது?

ஓட்டுனர்: அதுதான் ஐயா எனக்கும் தெரியல? அப்ப நான் தூங்கிக்கிட்டிருந்தேன்!!!
போலிஸ்:!!!!!


-----------------------------------------------------------------------------நோயாளி:என்னால வாய திறக்க முடியல டாக்டார்

மாருத்துவர் :சரி! சரி! உங்க மனைவியை வெளியில வெயிட் பண்ண சொல்றேன்
-----------------------------------------------------------------------------எப்பொருள் யார்யார் பையில் இருப்பினும்

அப்பொருள் அப்போதே சுடப்படும்