நான் ரசித்த சில நகைச்சுவைகள்


இந்தப் படத்துல அடிக்கடி மதியச் சாப்பாட்டைப் பற்றியே கதாநாயகன் வசனம் பேசறாரே... ஏன்?.


அது லஞ்ச் டயலாக்காம்..!

---------------------------------------------------------------------------

தொப்பையைப் பார்த்து ஜோசியம் சொல்றாரே... யார் அவர்?

அவர் போலீசுக்கான ஸ்பெஷல் ஜோசியராம்..!---------------------------------------------------------------------------

மன்னா... உங்களுக்குச் சொந்தமான
பகுதியைக் கைப்பற்ற, எதிரி மன்னர்கள் மோதிக்கொள்கிறார்கள்!

எனக்குச் சொந்தமான பகுதியா... எது அது?

உங்கள் முதுகுதான் மன்னா!


---------------------------------------------------------------------------

எதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி கொண்டு வந்து வைக்கிறே..!

நீங்கதானே மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டப் போறேன்னு சொன்னீங்க..?


---------------------------------------------------------------------------


ஆபரேஷனுக்கு முக்கியமான டிப்ஸ் தர்ற மெடிக்கல் வெப்சைட் அட்ரஸ் தர்றதா சொன்னேன்... இந்த மாசம் சம்பளம் ரெண்டாயிரம் ஏத்திட்டார்!---------------------------------------------------------------------------

நேத்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை...கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு வந்தேன்!

உன் பொண்டாட்டியையா..?

இல்ல... சைக்கிளை!

---------------------------------------------------------------------------

என்னதான் ஸ்டன்ட் மாஸ்டர் மகனா இருந்தாலும், வேலைக்கு அப்ளை பண்றப்போ... அப்ளி கேஷன் கூட ரெஸ்யூம் தான் வைக்கவும்; டிஷ்யூமை வைக்க முடியாது!

சண்டையை வைத்து மண்டையை பிய்த்துக் கொண்டு சண்டேயில் தத்துவம் எழுதி, சண்டே போஸ்ட் செய்வோர் சங்கம்

இப்படியும் படத்தலைப்புகள் வரலாம்

சென்னையில் கல்லூரி இளசுகளிடையே ஒரு எஸ்.எம்.எஸ். ரொம்ப பிரபலமாகி வருகிறது சமீப காலமாக...! அது கோலிவுட் நாயகர்களின் பட டைட்டில்களைப் பற்றிய நக்கலும் நையாண்டியும்தான் என்பது ஹைலைட்.

சுறாவை அடுத்து விஜய் நடிக்க இருக்கும் படங்களின் தலைப்பு நெத்திலி, கருவாடு, வஞ்சிரம், திமிக்கலம் என்பதாக இருக்குமாம்.

மங்காத்தாவில் நடித்து வரும் அஜித்தின் அடுத்தடுத்த படத் தலைப்புகள்... மாரியாத்தா, செல்லாத்தா என்பதாக இருக்குமாம்.

தனுஷ் படிக்காதவனைத் தொடர்ந்து எழுதாததவன், விளங்காதவன் உள்ளிட்ட படங்களிலும்,

ஜீவா எஸ்.எம்.எஸ் படத்தை தொடர்ந்து எம்.எம்.எஸ், மிஸ்ட்கால், டயல்ட் கால் உள்ளிட்ட படங்களிலும்,

விஷால் சத்யம் படத்தை தொடர்ந்து இன்போசிஸ், விப்ரோ பெயரை உ‌டைய படங்களிலும்,

சிம்பு சுவரைத்தாண்டி வருவாயா, துண்டைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களிலும்,

மாதவன் குரு என் ஆளு, கவிதா உன் ஆளு, ரஞ்சிதா சுவாமிஜி ஆளு உள்ளிட்ட படங்களிலும் நடிப்பதாக சொல்லி கிண்டலடிக்கிறது அந்த இளசுகளின் எஸ்.எம்.எஸ்.!

‌கோடம்பாக்கத்தின் டைட்டில் பஞ்சம் இப்படியும் தலைப்புகளை சூட்ட வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார் வேதனையுடன் ஒரு ரிட்டயர்டு கோலிவுட் டைரக்டர்!

சர்தார்ஜி ஜோக்ஸ்

ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்.கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!


-----------------------------------------------------------------------------

சர்தார்ஜியின் பிறந்த ஊர்:

ஒரு நேர்முகத் தேர்வில்..

அதிகாரி: நீங்கள் பிறந்த ஊர் எது?
சர்தார்ஜி (ஜம்பமாக): செக்கோஸ்லோவாகியா
அதிகாரி: அதோட ஸ்பெல்லிங் சொல்லுங்க..
சர்தார்ஜி (பரிதாபமாக): ஸாரி சார்! என்னோட ஊர் சண்டிகார்.


-----------------------------------------------------------------------------


மொத்த உடலும்...

சர்தார்ஜியிடம் ஒருவர்...

“நீங்க எங்க பிறந்தீங்க..?
“பஞ்சாப்பில்...

“பஞ்சாப்பிலே எந்த பாகம்?”
“எந்த பாகமா? மொத்த உடலும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது”
-----------------------------------------------------------------------------

அப்பர் பெர்த்தில் சர்தார்ஜி சர்தார்ஜி: "அப்பர் பெர்த்திலே வந்ததாலே இராத்திரி முழுக்க தூங்கவே முடியலை" சர்தார்ஜியின் மனைவி: "லோயர் பெர்த்திலே இருந்தவங்க கிட்டே சொல்லி மாத்தியிருந்திருக்கலாமே?" சர்தார்ஜி: "லோயர் பெர்த்துலேதான் யாரும் இல்லையே! எப்படி மாத்தியிருக்க முடியும்?"

கடி ஜோக்ஸ் (9-9-2010)

இந்தப் படத்துல அடிக்கடி மதியச் சாப்பாட்டைப் பற்றியேகதாநாயகன் வசனம் பேசறாரே...

ஏன்?.

அது லஞ்ச் டயலாக்காம்..

=============

தொப்பையைப் பார்த்து ஜோசியம் சொல்றாரே... யார் அவர்?

அவர் போலீசுக்கான ஸ்பெஷல் ஜோசியராம்..!

=================

‘மன்னா... உங்களுக்குச் சொந்தமான பகுதியைக் கைப்பற்ற, எதிரி மன்னர்கள் மோதிக்கொள்கிறார்கள்! எனக்குச் சொந்தமான பகுதியா... எது அது?’’‘

‘உங்கள் முதுகுதான் மன்னா!


=================

எதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி கொண்டு வந்து வைக்கிறே..!

நீங்கதானே மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டப்போறேன்னு சொன்னீங்க..?============

என்னதான் ஸ்டன்ட் மாஸ்டர் மகனா இருந்தாலும், வேலைக்கு அப்ளை பண்றப்போ... அப்ளி கேஷன் கூட ரெஸ்யூம் தான் வைக்கவும்; டிஷ்யூமை வைக்க முடியாது!

சண்டையை வைத்து மண்டையை பிய்த்துக் கொண்டு சண்டேயில் தத்துவம் எழுதி, மண்டே போஸ்ட் செய்வோர் சங்கம்.

இதுக்கும் கட்சி ஆரம்பிச்சுட்டாங்களா?


ந்த ஒரு விஷயத்துக்கு தான் இன்னும் கட்சி ஆரம்பிக்காம இருந்தாங்க...


இப்ப அதுவும் பண்ணிடாங்...

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.


.

.

.

.

.

.

.

.

.

.

.


ஜோக்ஸ்

போர்க்களத்தில் ஏற்பட்டகாயங்களைப் பார்த்தபடி, வைத்தியருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் மன்னர்!’’

‘‘வலி மேல் விழி வைத்துக் காத்டிருக்கிறார் என்று சொல்
லுங்கள்..!’

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நல்ல நல்ல ஹெல்த் டிப்ஸ்லாம் அடிக்கடி சொல்வா...அதனால யாரு, என்னன்னு விசாரிக்காம
வேலைக்கு வச்சது தப்பாப் போச்சு இன்ஸ் பெக்டர்! இப்படி நகை¬ யத் திருடிட்டு
ஓடிட்டாளே...’’

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக் கேட்க கூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?

அது என்ன வீரப்பன் வெடி ?

மற்ற வெடியை வெடிச்சா கந்தக வாசம் வரும். .. இந்த வெடியை வெடிச்சா சந்தன வாசம்
வரும் *

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பத்தவெச்சா அது பாட்டுக்குப் பேசாமலே இருக்கும். திடீர்னு நாம எதிர்பார்க்காத
நேரத்துல வெடிச்சிடும் *

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இது வெடிக்கற சத்தம் போலீஸ் காரங்க தவிர, மத்த எல்லோருக்கும் கேட்கும் *

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரே இடத்தில் வெடிக்காம இடம் மாறி மாறிப் போய் வெடிச்சுக்கிட்டே இருக்கும் *


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எல்லா வி.ஐ.பி-யும் ஒரே இடத்துல கூடி, வர்ற ராக்கெட் வெடியை அண்ணாந்து
பார்த்துக்கிட்டிருக்காங்களே. .. என்னவாம். .?

அதுவா. .. வீரப்பன் அதுல வெச்சு ஏதோ காஸெட் அனுப்பியிருக்கானாம் *

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

என்ன இது, போலீஸ்காரங்கள்லாம் கூட்டமா சந்தனக்காட்டுக்குப் போறhங்க.. .
வீரப்பனைப் பிடிக்கவா.. .?

இல்லீங்க.. . வீரப்பன் கிட்டே தீபாவளி மாமூல் வாங்கறதுக்கு *

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

என்ன இது. கூட்டணி வெடின்னு சொன்னீங்க. ஆனா, இந்தக் கட்டுல ஒரே ஒரு வெடிதான்
வெடிக்குது.

என்ன செய்யறது. கூட்டணில அந்த ஒரு வெடிக்கு மட்டும்தான் எல்லா பவரும்.

பில்கேட்ஸ் தமிழனாக பிறந்திருந்தால்

பில்கேட்ஸ் தமிழனாக பிறந்திருந்தால், அதுவும் நம்ம சிங்கார சென்னை வாசியாக இருந்தால் எப்படி இருக்கும் !! !! !!
பில்கேட்ஸ் தமிழனாக பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள்.

அதன் மெனு அட்டவணை இவ்வாறாக மைந்திருக்கும்.

Save = வெச்சிக்கோ

Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ

Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ

Help = ஒதவு

Find = பாரு

Find Again = இன்னொரு தபா பாரு

Move = அப்பால போ

Mail = போஸ்ட்டு

Mailer = போஸ்ட்டு மேன்

Zoom = பெருசா காட்டு

Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு

Open = தெற நயினா

Close = பொத்திக்கோ

New = புச்சு

Old = பழ்சு

Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு

Run = ஓடு நய்னா

Execute = கொல்லு

Print = போஸ்டர் போடு

Print Preview = பாத்து போஸ்டர் போடு

Cut = வெட்டு - குத்து

Copy = ஈயடிச்சான் காப்பி

Paste = ஒட்டு

Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு

Delete = கீச்சிடு

anti virus = மாமியா கொடுமை

View = லுக்கு உடு

Tools = ஸ்பானரு

Toolbar = ஸ்பானரு செட்டு

Spreadsheet = பெரிசிட்டு

Database = டப்பா

Exit = ஓடுறா டேய்

Compress = அமுக்கி போடு

Mouse = எலி

Click = போட்டு சாத்து

Double click = ரெண்டு தபா போட்டு சாத்து

Scrollbar = இங்க அங்க அலத்தடி

Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு

Next = அப்பால

Previous = முன்னாங்கட்டி

Trash bin = கூவம் ஆறு

Solitaire = மங்காத்தா

Drag & hold = நல்லா இஸ்து புடி

Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?

Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?

Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?

Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு

Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?

General protection fault = காலி

Access denied = கை வச்ச..... கீச்சுடுவேன்!

Unrecoverable error = படா பேஜார்பா

Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்

Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

ஒரு வலியா இரு வலியா

நடந்து அழுதமின்னா
நடந்த
எடம்
ஆறாகும்!

நின்னு அழுதமின்னா
நின்ன
எடம்
குளமாகும்!

புரண்டு அழுதமின்னா
புரண்ட
எடம்
கடலாகும்!


ஒரு வலியா
இரு
வலியா
ஒப்பாரி
வச்சி
அழ!

இது வழியா
அது
வழியா
எங்கேன்னு
போயி
விழ!


பூன வழி மறிச்சி
போகாதே
என்று சொல்ல

நாயி வழி மறிச்சி
நானும்
வர்றேன்
என்று சொல்ல

வளத்த
பூச்செடிய
வாகாக
வருடிவிட்டு

படிச்ச
படித்துறைய
பாத்து
அழுதுபுட்டு


வாறேன்னு
சொன்னதுமே
வாகை
மரமங்கே
வாடி
அழுததய்யா!

போறேன்னு
சொன்னதுமே
பூவரசு
மரமங்கே
புலம்பி
அழுததய்யா!


தூங்க மகனுக்கு
அங்க
தூளி
கட்ட
முடியலய்யா!

வெளஞ்ச
மகளுக்கு
அங்க
வேலி
கட்ட
முடியலய்யா!

நாய் குரைக்கும்
சத்தத்துக்கு
நாங்க
நடுங்காத
நாளுமில்ல!

போய்ப் பதுங்கும்
பொந்துக்குள்ள
அய்யோ
புடுங்காத
தேளுமில்ல!


பட்ட கத சொன்னமின்னா
ஒங்க
மனம்
பத்தி
எரியுமய்யா!

அவுக . . .
சுட்ட கத சொன்னமின்னா
ஒங்க
மனம்
துடிச்சி
எரியுமய்யா!


எங்கமன வேதனைய
எழுத்தாக்க
நெனச்சமுன்னா
அய்யோ அந்த
எழுத்தாணி
உருகுமய்யா!

பாவி மன
வேதனைய
படமாக்க
நெனச்சமுன்னா
அய்யோ அந்த
படச்சுருளும்
கருகுமய்யா!


ஒரு வலியா
இரு
வலியா
ஒப்பாரி
வச்சி
அழ!

இது வழியா
அது
வழியா
எங்கேன்னு
போயி
விழ!