நகைச்சுவை - 29

ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா?

தெரியாதே!

அட....இதுகூடப் புரியாம இருக்கியே மக்கு....
ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்.


---------------------------------------------------------------------------------------------------------------------


உங்க மாமா டெல்லிக்குப் போனாரே...
அங்க என்னவா இருக்கார்?

அங்கேயும் எங்க மாமாவாத்தான் இருக்கார்.

---------------------------------------------------------------------------------------------------------------------உங்கள் ஊரில் பெரிய மனிதர்கள் யாராவது
பிறந்திருக்கிறார்களா?

இல்லை, குழைந்தைகள்தான் பிறந்திருக்கின்றன.

---------------------------------------------------------------------------------------------------------------------


மகாபாரதத்திலே உட்கார்ந்துகொண்டே
இருந்தவர் யார்?

குந்தி தேவி!


---------------------------------------------------------------------------------------------------------------------

போஸ்ட்மேன் கல் தடுக்கி எப்படி விழுவார் ?

’தபால்’-ன்னு விழுவார் !

நகைச்சுவை - 28

நான் தினமும் சாப்பாட்டுக்கு முன்
கடவுளை வணங்குவேன், நீங்கள் ?

நான் வணங்கவதில்லை !. என் மனைவி நன்றாகவே சமைப்பாள்.


------------------------------------------------------------------------------------------------------------


காவலாளி: இந்த குளத்தில் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

பெண்: ஆடை அவிழ்ப்பதற்கு முன்னே சொல்லியிருக்க கூடாதா?

காவலாளி: அதை தடுக்க எந்த சட்டமும் இங்கு இல்லை

------------------------------------------------------------------------------------------------------------

எதுக்கு டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க?

இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா ’கொசு’ங்கிறான் !


------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர்: நீங்க யாரு என்ன சொன்னாலும் ஆமான்னு சொல்லுவீங்களா ?

மற்றவர்: ஆமா!


------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர்: சினிமா தியேட்டருக்கு எப்படி போகணுங்க?

மற்றவர்: கையில் காசோட போகணும் !

நகைச்சுவை - 27

எங்கம்மாவுக்கு சக்கரை வியாதி இருக்கிறது. என்
மனைவிக்கு தெரியாது..

ஏன், தெரிஞ்சா வருத்தப்படுவாங்களா..?

இல்லை, நிறையா சுவீட் செஞ்சு கொடுத்துடுவா


--------------------------------------------------------------------------------------------------


ஆபிஸ்ல யாராவது தூங்கினா என்கிட்ட வந்து சொல்லு..

சரி சார்..

நான் தூங்கிட்டு இருந்தாலும் பரவாயில்லை. எழுப்பி
சொல்றே....

--------------------------------------------------------------------------------------------------


நீ ஆபீஸ் வேலையை வீட்டிலேயும் பார்ப்பியாமே...

ஆமாம், தூங்கறதுதான்...


--------------------------------------------------------------------------------------------------


ஒரு பையன் ஸ்கேலை கையில் வச்சுகிட்டு சாப்பிடுறான் ஏன் ?

ஏன்னா... அவன் அளவோடு சாப்பிடறான்

--------------------------------------------------------------------------------------------------


குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !

டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !

மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?
நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா ?

நகைச்சுவை - 26

எங்க மானேஜர் ரொம்ப மரியாதையை எதிர்பார்ப்பாரு'

'நிஜமாவா...?'

'ஆபிஸ்ல அவரு எதிரே காலை நீட்டிக்கிட்டு படுத்தா திட்டுவாரு...'


---------------------------------------------------------------------------------------------------------------------


டே! செல்லம், மீயூசிக் சேனல்ல அடிக்கடி நீ எனக்கு
எஸ்.எம்.எஸ் செய்யறத எங்க அப்பா பார்த்து தொலைச்சுட்டார்..'

'அய்யையோ! என்ன சொன்னார்?'

'ஏகப்பட்ட கிராமர் மிஸ்டேக் செய்யறியாம்....
நல்ல டீச்சரைப் பார்த்து டியூஷன் போகச் சொன்னார்!'

---------------------------------------------------------------------------------------------------------------------என் மேனேஜர் ஒரு கொசு மாதிரி..

ஏன் ஆபீஸ்ல யாரும் மதிக்க மாட்டீங்களா..?

இல்லை, அவர் யாரையும் தூங்கவிட மாட்டாருன்னு
சொல்றேன்


---------------------------------------------------------------------------------------------------------------------

பேயை கண்டா நாய் குறைக்கும்னு சொல்றாங்களே, அது
உண்மையா...?

ஏன், கேட்கறீங்க..?

இல்லை, என் மனைவி பார்த்தா நாய் குறைக்குது...

நகைச்சுவை - 25

காய்கறி மார்கெட்டில் ஒரு பெண் உன்னைக் கைநீட்டி
அடிச்சாளாமே !...அவளை சும்மாவா விட்டே ?

விடுவேனா ! அவ யார்ன்னு விசாரிச்சு என் பையனுக்கு பேசி
முடிச்சு, மருமகளா ஆக்கிட்டேன்ல.....

வரட்டும், அந்த மூதேவி !'


----------------------------------------------------------------------------------------------------------------------

'என்னடா ஸ்கூல்ல ஒழுங்கா படிக்கிறியா?'

'இது என்ன கேள்வி?

'ஆபிஸ்ல ஒழுங்கா வேலை செய்யறீங்களான்னு நான் உன்களை கேட்டேனா?'


----------------------------------------------------------------------------------------------------------------------உங்க பையில எவனோ பிளேடு போட்டான்னு சொன்னீங்களே....என்ன பண்ணீங்க ?'

'என்ன பண்றது. அதை எடுத்து தான் நேத்து சேவிங் பண்ணிக்கிட்டேன்


----------------------------------------------------------------------------------------------------------------------அடுத்த ஜென்மத்திலாவது நாயா பொறக்கணும்னு சலிச்சுக்கிறீங்களே.

ஏன் சார் ?'

'அதுக்குதான் என் மனைவி பயப்படறா !'

நகைச்சுவை - 24

பந்தி பரிமாறுறவங்க, சாப்பிடுறவங்களை
ஏன் உத்து உத்துப் பார்க்கிறாங்க ?'

'பெண்ணோட அப்பதான் எல்லோரையும் பார்த்துப் பார்த்துப்
பரிமாறணும்னு சொல்லியிருக்காரே !'


-------------------------------------------------------------------------------------------------------

ராப்பிச்சையைப் பார்த்தா வயிறு எரியுது !'

ஏன் ?

'ஏப்ரல், மே ரெண்டு மாசமும் ஊட்டி கொடைக்கானல்ல குளு குளுனு டியூட்டி பார்த்துட்டு வந்திருக்கானாம் !'

-------------------------------------------------------------------------------------------------------


வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ னு அரசாங்கம்
சொன்னதும், சர்தார்ஜி தன் வீட்ல இருந்த ஒரு மரத்தை
வெட்டிட்டாரு.... ஏன் தெரியுமா ?'

அவர் வீட்ல இருந்தது ரெண்டு மரம் !

-------------------------------------------------------------------------------------------------------

ஆபீஸை எப்பவும் குடும்பமா நினைச்சுக்கனும்...

'டைப்பிஸ்ட் மாலாவை எப்பவும் என் முறைப்பொண்ணு மாதிரிதான் சார் நினைக்கிறேன் !

நகைச்சுவை - 23

அபிராமி அபிராமி - கமல்

கடவுளே கடவுளே - ரஜினி

தகடு தகடு - சத்தியராஜ்

அம்மா தாயே - அது நீதான்


-----------------------------------------------------------------------------------------------------------

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதில் நம் பிரதமரின் பெயர் என்ன ?'

'அப்பவும் இவர் பெயர் மன்மோகன் சிங்தான் !'


-----------------------------------------------------------------------------------------------------------

பண விசயத்தில் யார் எது சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்....

இதையேன் என் கிட்ட சொல்லுறீங்க ?

கையில காசு இல்லேன்னா சொல்லாம ஒரு நூறு ருபாய் கடன் கொடுங்க !


-----------------------------------------------------------------------------------------------------------

'டிவில சீரியல் பாக்கற்ப்ப ஏதோ பந்தயம் நடத்தறியாமே... என்ன
அது ?'

'அதுவா? சீரியல் பார்த்து முதல்ல அழறது யார்ன்னு நானும் பக்கத்து வீட்டுக்காரியும் பணம் கட்டி பந்தயம் வைச்சோம்.'

நகைச்சுவை - 22

எங்க ஏரியாவுல தண்ணிப் பஞ்சம் அதிகம் !'

'அப்படியா ?'

'ஆமாம், ஒருநாள் விட்டு ஒருநாள்தான்
பால்காரரே வருவாருன்னா பார்த்துக்கோயேன் !'

-----------------------------------------------------------------------------------------------------

அவருக்கு நான் ரொம்ப கடன்பட்டிருக்கேன் !'

'எந்த விசயத்துல ?'

'பண விசயத்துலதான் !'

-----------------------------------------------------------------------------------------------------


பாகற்காய் வியாபாரத்துல ஏகப்பட்ட நட்டம் !'

'அது ஒரு கசப்பான அனுபவம்னு சொல்லுங்க !'

-----------------------------------------------------------------------------------------------------


ஆபீஸ்ல கொசுவலை கட்டித் தூங்குறாங்களே, ஏன் ?

'சிக்கன் குனியாவுக்குப் பயந்துக்கிட்டுதான் !'

-----------------------------------------------------------------------------------------------------


இவர் தலைக்கறி பிரமாதமா சமைப்பார் !'

'அப்ப... ஹெட் குக்னு சொல்லுங்க !'

நகைச்சுவை - 21

'தானத்தில் பெரிய தானம் எதுடா ?'

'மைதானம் சார் !'

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


என் மாமியார் வாழைப் பழத் தோல் சறுக்கிக் கீழே விழுந்து காலை உடைச்சுக்கிட்டாங்க...!'

'அப்ப நீ என்ன பண்ணிட்டு இருந்தே ?'

'வாழைப் பழத்தைச் சாப்பிட்டுகிட்டு இருந்தேன் !'

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஏன் அந்த சாமியாரை வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்துல கைது பண்றாங்க?'

'ஒரு பக்தி ’மானை’ கொன்னுட்டாராம்!'

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------மதன்! நீ மட்டும் ஏன் 'ஹொம் ஒர்க்' பண்ணல?'

'நான் ஹாஸ்டல்ல தங்கி இருக்கேன் ஸார்!'

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


நேத்து ஒரு ராங் கால் பண்ணிட்டேன்.... அது பலான
இடத்துக்கு போயிடுச்சு !'

'பலான இடம்னு எப்படிக் கண்டுபிடிச்சே ?'

'ரிக்கார்டிங் வாய்ஸ்ல ’அனைத்து அணைப்புகளூம்
உபயோகத்தில் உள்ளன’ன்னு வந்துச்சே !'

டெலிவரி ஆயிடுச்சா ?

'எங்கம்மாவுக்கு மூச்சுவிட

ரொம்ப சிரமமா இருக்காம் கமலா !''அவ்வளவு சிரமப்பட்டு

எதுக்கு மூச்சு விடணும்னு கேக்கறேன் !'


----------------------------------------------------------------------------------------------

'நான் என்ன சொன்னாலும், என் மருமகள் ’உங்க
வாய்க்கு சர்க்கரைதான் போடணும் அத்தை’னு சொல்றா !'

'இதிலே என்ன இருக்கு ?'

'எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு !'

--------------------------------------------------------------------------------------------

நேத்து நீங்க ஏன் ஆபீசுக்கு லீவு போட்டீங்க ?'

'சொன்னா சிரிக்க கூடாது. எங்க பாட்டி செத்துப் போய்ட்டாங்க
நெஜம்மா...!'


--------------------------------------------------------------------------------------------------

டெலிவரி ஆயிடுச்சா ?'

'என்ன சார் நீங்க.. அதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கே !'

'அட, நம்ம ஆபிஸ் சரக்குகளைப் பத்திக் கேட்டேம்மா !'

நகைச்சுவை - 20

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,

Rewindலாம் பண்ண முடியாது.

———

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.

சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.---ஆனா,

கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

———-

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.

ஆனா,

ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?

நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!

———-

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,

ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!
அதேமாதிரி,
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்?

"Tea"ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல 2 "e" இருக்கும்.

———-

- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது) - ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்


நகைச்சுவை - 19

இளநீர்லயும் தண்ணி இருக்கு,

பூமிலயும் தண்ணி இருக்கு.

அதுக்காக,

இளநீர்ல போர் போடவும் முடியாது,

பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.

———-

உங்கள் உடம்பில்

கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,

ஒரு செல்லில் கூட

ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

———-

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்

ஆனா

ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

——-

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.

ஆனால்...

டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

———-

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

நகைச்சுவை - 18

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,

ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?

இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

———-

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,

கழித்தல் கணக்கு போடும்போது,

கடன் வாங்கித்தான் ஆகனும்.

———

கொலுசு போட்டா சத்தம் வரும்.

ஆனா,

சத்தம் போட்ட கொலுசு வருமா?

———

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,

ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.

இதுதான் உலகம் (ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)

———-

T Nagar போனா டீ வாங்கலாம்.

ஆனால்

விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

———

என்னதான் பெரிய

வீரனா இருந்தாலும்,

வெயில் அடிச்சா,

திருப்பி அடிக்க முடியாது

ஜோக்ஸ்

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்

ஆனா,

நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

————

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.

சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.---ஆனா,

கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

———-

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.

ஆனா,

ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?

நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!

சிரிப்பின் தத்துவம்

சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்
அழுங்கள், நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்.

இன்று வாழ்வில் நாம் திரும்பிப் பார்க்கும் திசையில் எல்லாம் தெரிபவை இரண்டு.
அவைகளில் ஒன்று திருப்தி. மற்றென்று பேராசை. இந்த இரண்டும் தனித்தனியாக்கூட
இல்லை. உள்ளங்கையும் புறங்கையும் போல ஒன்றின் இருபக்கங்களாக இருக்கின்றன.
யாரிடம் பேராசை இருக்கிறதோ அவரிடம் மறுபுறம் திருப்தியும் இருக்கிறது. கிடைத்தற்குப் திருப்திப்பட்டுக் கிடைக்க வேண்டியதற்காக உழைக்கும் ஆரோக்கியமான மனநிலை தென்படவில்லை.

காரணம், மன இறுக்கம், மன உளைச்சல்.

இந்த மன புகைச்சலிருந்து விடுபட உதவுவது மனம் விட்டு சிரிப்பது.
N.S. கிருஷ்ணன் பாடிய சிரிப்பு பாடலைப் பலரும் கேட்டு இருக்கலாம்.
சில சிரிப்புகளை சிறிது அலசுவோம்.

வாய்விட்டு சிரிப்பது - நமட்டு சிரிப்பு - வாயை மூடிக்கொண்டு சிரிப்பது - ஓகோ என்று சிரிப்புது- அவுட்டு சிரிப்பு - வெடிச்சிரிப்பு - 'களுக்'கென்று சிரிப்பு - பயங்கரமாய் சிரிப்புது - புன்சிரிப்பு - வயிறு வலிக்க சிரிப்புது - விழுந்து, விழுந்து சிரிப்புது - குபீரென்று சிரிப்பு - மனதுக்குள்ளே சிரிப்பு - உதட்டளவில் சிரிப்பு , வெறிச்சிரிப்பு - கலகலவென்று சிரிப்பு - 'பக்'கென்று சிரிப்பு- குலுங்ககுலுங்க சிரிப்பு- கடைசியாக வருவதுதான் *கபட சிரிப்பு* [விடுப்பட்ட சிரிப்பு இருந்ததால் தெரிவிக்கலாம்.]

நகைச்சுவை என்பது சில சமயம் கேலி செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. எதையும் கேலி செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும். அதை நகைச்சுவையோடு கேலி
செய்வதற்கு புத்திசாலிதனம் வேண்டும். அதுவும் பிறர் மனம் புண்படாமல் கேலிசெய்ய,
கேலி செய்வதற்கு பக்குவமான அறிவு வேண்டும். அத்துடன் சிந்தனையை தூண்டிவிட
தெளிந்த மனம் வேண்டும்.

சிரிப்பு ஆக்கபூர்வமமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது.
மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது.
அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். அவ்வளவுதான்.
சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்
[சிரிக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன் பல்லைக் கடித்துக்கொண்டு
இருந்தால்.... மன்னிக்கவும்.]

சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால், அது மிகையல்ல. கடந்த
20 ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும் , நோய்களுக்கும் இடையேயான தொடர்பை ஆராய்ந்து வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஒரு உண்மையைக் கண்டறிந்தனர்.

நமது எண்ணங்களுக்கும் மன நிலைக்கும் ஏற்றபடி உடலினுள் இயங்கும் செல்களின்
நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது குறைகிறது என்பதே அது. 1993-ம் ஆண்டின் இவ்வாராய்ச்சியில் ஒரு பயனுள்ள உண்மை கண்டறியப்பட்டது.
நமது நரம்புகள் ஒரு ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டுடிருக்கிறது. இதற்கு "CGRP" என்று பெயர். இதுதான் நரம்புகளுக்கு அடியிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களின் இயல்பை ஊக்குவிப்பதும், மட்டுப்படுத்துவதும். நமது மன அலைக்கு ஏற்ப 'CGRP' அதிகமாக
உற்பத்தியாக்கி உடலில், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக்கும். நாம் மனம் விட்டுச்சிரிக்கும் போது 'CGRP' அதிகமாகச் சுரக்கிறது என்பதுதான் ஆராய்ச்சியில் கண்டறிப்பட்ட உண்மை.

உலகின் மிகச் சிறந்த மருந்து மனம்விட்டுச் சிரிப்பதே என்று நியூயார்க் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆர்தர்ஸ்டோன் தன் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார்.
நாம் சிரிக்கும் போது நம் மூக்குனுள் உள்ள சளியில் 'ம்யூனோகுளோபுலின் ஏ'
[IMMUNOGLOBULIN-A] என்ற நோய் எதிர்ப்புப் பொருள் அதிகா¢த்து பாக்டீயாக்கல், வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாமல் தடுக்கிறதுதாம். இதனால் மனம்விட்டுச் சிரிப்பவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழலாம் என்கிறார் இந்தப் பேராசிரியர்.
மேலை நாடுகளில் டாக்டர்கள் நோயாளிகளுக்கு -சிரிப்பு வீடியோக்களைப் பார்க்குமாறு
பா¢ந்துரை செய்கிறார்கள்.

நேர்மன் கசின்ஸ்' என்னும் அமெரிக்க நாவலாசியாரியர் 1983-ம் ஆண்டு தான் எப்படி இதய நோயிலிருந்து மீண்டும் வந்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
''நான் மாரடைப்பு வந்ததுடன் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவித்தேன்.
எளிய உடற் பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டேன்.
விளையாட்டு, நடைப்பயிற்சியும் மேற்கொண்ட பிறகு, மீதி நேரங்களில் வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தேன். அதற்கென நகைச்சுவைப் படங்கள் டி வி -யில் பார்த்தேன். நகைச்சுவை வசனங்களை டேப் ரிக்கார்டில் கேட்டு மகிழ்தேன். என்ன ஆச்சா¢யம் ? நாளடைவில் என் இதயம் பலப்பட்டு நோய் இருந்த இடம் சுவடே தெரியாமல் மறைந்து போனது"

நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியைச் 'சிரிப்பு' முடுக்கிவிடுகிறது என்பதைச் சிரிப்பு பற்றி ஆராய்ந்த மருத்துவ அறிஞர் வில்லியம் பிரை தன்னுடைய ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார்.

சிரிப்பு பற்றி ஆராயும் மருத்துவ அறிஞர்களை ' GELOTO LOGIST என்கிறார்கள்.
இவர்கள் பலவித ஆய்வின் மூலம் கண்டறிந்த உண்மைகள் அவைகள்.

சிரிப்பு நம்மிடைய ரத்ததில் அதிகப்படியான ஆ க்ஸஜன் இருப்பதற்கான தசைகள்
வலுவடைகின்றன. ''இரத்த அழுத்தம்'' அளவு குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகின்றன.
'என்சீபேலின்ஸ்' என்ற ஹார்மோனை நம் உடலில் சுரக்கச் செய்து தசைவலியை நீக்க உதவுகிறது சிரிப்பு. சிரிப்பதனால் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம் அதிகா¢க்கிறது. மன இறுக்கம் தளர்கிறது

சிந்தைக்கும், உணர்ச்சிகளுக்கும் தலைமை பீடமாகச் செயல்படும் - நம் மூளையின்
வலப்பக்கப் பகுதி, சிரிப்பினால் நன்கு செயல்படுகிறது.
சிரிப்பு- பெப்டிக் அல்சர் போன்ற இரைப்பைப் புண்கள் வராமலேயே தடுக்கிறது.
உலக வாழ் உயிரனங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். சிரிப்பினால் எவ்வளவு
நன்மைகள் என்று சிரித்து பாருங்கள்.

எனவே, நோய்விட்டுப் போக மனம் விட்டுச் சிரியுங்கள்.
"சிரிக்க தொ¢ந்த சமுதாய விலங்கு மனிதன்" என நம்மை மற்ற இனங்களிலிருந்து
வகைப்படுத்தி அறிவியலார் கூறுவதுண்டு.

சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு
இல்லாத சிறப்பு.

மனிதனுக்கு பல சமயங்களில் மன இறுக்கத்தை குறைக்க, நட்பை வளர்க்க
ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழக, இடைவெளியை குறைக்க, மனத்தெளிவு, மனமகிழ்ச்சி
என பலவிதமான பயன்பாட்டில் திகழ்கிறது இந்த சிரிப்பு.
நகைச்சுவை மனிதனை சிரிக்க வைக்க மட்டும் இல்லாமல் அது வேறு பல
சுவைகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது.

''பெர்னாட்ஷ'' ஒரு சமயம். ''உண்மையான அறிவு என்பது நகைச்சுவையான சிரிப்பு
பின்னணியிலேயே செயல்படுகிறது' என்றார். நகைச்சுவையும், சிரிப்பும் அறிவை அளவிட்டு
காட்டுவதாக பெரும்பாலும் அமைகிறது.

நகையும் சுவையும் சிரிப்பும் அறிவு பூர்வமானது என்பதை மெய்ப்பிக்க, நமக்கு
அக்பர், பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவை சான்றாக இருக்கிறது.
அமரர் 'கல்கி' யின் படைப்புக்கள் நகைச்சுவை முலாம் பூசப்பட்டு மிளிர்பவைதான்.

இன்றைய கால கட்டத்தில் நமக்கு கொஞ்சம் நகைச்சுவையும், சிரிப்பும் பஞ்சம்
ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம். சமுதாய சூழ் நிலையும், மன உளைச்சலும் இதற்கு காரணம் கூறலாம்.

நம்மில் சிலர்- பொ¢ய பதவியிலுள்ளவர்கள் 'சிரித்துப் பேசக் கூடாது' என்று
கங்கணம் கட்டிக்கொண்டு இறுக்கமாகவே இருக்கிறார்கள்.
இந்தப் போக்கு மாறவேண்டும்.

நகைச்சுவை உணர்வால் மட்டுமே பொறுமை வளர்க்க முடியும். நண்பர்களிடத்தில்
தனித் தோற்றத்தையும், குடும்பத்தினரிடம் அதிகம் நெருக்கத்தையும் எந்த விதமான
இடர்பாடுகளையும் எளியதாகக் கையாளவும், சிறப்பாக நமக்கு உதவி செய்கிறது.
சிரிப்பது உங்கள் கடமை. மனிதனின் சோர்வை அகற்றுவது சிரிப்பு. சிரிக்கும் உணர்வு
இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும்.
மனதுக்கு தைரியம் அளிப்பது நகைச்சுவை உணர்வுதான். சிரிக்க கூடிய சக்திதான்.
சிரிப்பு 'கவர்ந்திழுக்கக்' கூடியது முகம். சிரித்த முகத்துடன் இருப்பவர்கள்,
அந்த புன்சிரிப்புதான் எத்தனை அழகானது!!!

இளமையான புன்னகை இனிமையான ஆன்மாவைக் குறிக்கிறது. கண்ணுக்குள்
தொ¢யமால் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அழகை வெளிப்படுத்துவது புன்னகை.
'மர்ரெ பாங்க்ஸ்' என்ற தத்துவ டாக்டர், இன்றைய உலகத்தின் நெருக்கடிகள்,
கஷ்டங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட, சிரிப்பு ஒன்றுதான் வழி. உங்களால் சிரிக்க முடிகிறது
என்றால் நல்ல மனத்தோடு இருக்கிறீர்கள் என்று பொருள். சிரிப்பு உங்களுக்கு
உடல் நலத்தைத் தருகிறது. செல்வத்தைத் தருகிறது. ஏன் அதை நீங்கள் விடவேண்டும்.?

இன்றைய் உலகம் இளையர்கள் கையில். இளையர்கள் சிரிப்பை விரும்புகிறார்கள்.
நீங்கள் சிரிக்காமல் இருந்தால் இளையதலைமுறையினர் நட்பை இழக்கிறீர்கள்.
உலகத்துடன் உள்ள தொடர்பை இழக்கிறீர்கள்.

இந்த பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது
மிக்க அவசியமாகிறது.

நல்ல நகைச்சுவைகளை அனைத்தும் நாம் தனியாக இருந்து சிரித்தாலும் நம்மை பற்றி மற்றவர்கள்,
''சாமிக்கு கொஞ்சம் மண்டை கிறுக்கு" என எண்ணக்கூடும்.

ஆகவே, அதனையும் கருத்தில் - கவனத்தில் கொண்டு சிரிக்கவும்,
மனம் விட்டு சிரிக்கவும். நலம் சிறக்கும்.