தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு!!!

விளையாட்டில் ஊழல் செய்தவர்களைக் காட்டிலும் எங்கள் தலைவர் ஊழல்களில் விளையாடி சாதனை பல கண்டவர் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

--------------------------------------------------------------------------------

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை தனியார் துறைளிலும் கொண்டு வருவோம் என்பதை இந்த வேளையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

--------------------------------------------------------------------------------

தலைவர் ஓவரா தண்ணி அடிச்சுட்டு ஆக்டோபஸ் ஜோசியம் பார்க்கப் போனது தப்பாப் போச்சா... ஏன்?

ஆக்டோபஸ்னு சொல்லிட்டு, ஒரு நண்டை வச்சு தலைவருக்கு ஜோசியம் சொல்லிட்டாங்களாம்.

--------------------------------------------------------------------------------

தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சா, ஏன்?

பின்ன, நோயாளிகளின் ஆதரவு பெற்ற சின்னம்னு சொல்லி ஓட்டுக் கேட்கிறாரே...

--------------------------------------------------------------------------------

தலைவர் "ஐபிஎல்"ல பத்தியெல்லாம் பேசுறாரே?

ஆமாம்... அதப் படிச்சுட்டா, வக்கீலாகலாமான்னு கேட்குறார்!'

--------------------------------------------------------------------------------

தலைவர் இன்னும் பழசை மறக்கலையா... எப்படிச் சொல்றீங்க?

மைக்கை பார்த்தவுடனே டக்குனு எழுந்து, மைக் டெஸ்டிங்! ஒன், டூ, த்ரிஷா,செவன், எளிணிட் , நயன்தாரா ன்னு டெஸ்ட் பண்றாரு!

--------------------------------------------------------------------------------

தலைவர் டென்ஷன்ல இருக்காரே... ஏன்?

எவனோ, தென்னகத்து திவாரியே வருக! ன்னு தலைவரை வரவேற்று போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டானாம்... அதான்!