கிசுகிசு

நடந்த கதை
உயர்ந்த நடிகரும் வருஷக்கணக்கில் படம் எடுப்பதில் பெயர் பெற்ற டைரக்டரும் சமீபத்தில் ஒரு ஒட்டலில் சந்தித்துக் கொண்டார்கள். நடிகருக்கு தனது 2 படங்கள் அடுத்தடுத்து ஒடாததால் இந்த இயக்குனரிடம் ஒரு படம் இயக்கித்தர கேட்டிருக்கிறார். இயக்குனரும் சரி என்று அப்போதே கதை சொல்லத் தொடங்கியிருக்கிறார். ஆனால் அந்தக்கதை தனது வேகமான நடிப்புக்கு சரிவராது என்று எண்ணி நடிகர் வேறு கதை சொல்லச்சொல்லி கேட்டிருக்கிறார்.
இதை எதிர்பாராத இயக்குனர் அதை தனது படைப்புக்கு நேர்ந்த அவமரியாதையாக எடுத்துக் கொண்டு நடிகரிடம் எகிற... ஒருவழியாய் சமாளித்து அவரிடம் இருந்து விடுபட்டு வந்திருக்கிறார், நடிகர்.
கதையில் திருப்பம் ஏற்படும்னு சொல்றது இதைத்தானோ!

15 நாட்கள் மட்டும் அனுமதி!

அயர்லாந்து டாக்டரை திருமணம் செய்துகொண்டு அங்கேயே போய்விட்ட `கோபி' நடிகையை, விசேஷ அனுமதி பெற்று மீண்டும் நடிக்க அழைத்து வந்து இருக்கிறார், மலையாள திலீப நடிகர்!
`கோபி' நடிப்பதற்கு 15 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கியிருக்கிறார், அவருடைய டாக்டர் கணவர்! படப்பிடிப்பு, தொடுபுழாவில் நடக்கிறது.

ஏமாற்றம்தான் மிஞ்சியது!
`பிரியமான' அந்த நடிகை தனக்கு தேசிய விருது கிடைத்ததும், விஜய்.. அஜீத்.. விக்ரம் போன்ற பெரிய கதாநாயகர்களிடம் இருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தார். இதனால் சின்ன கதாநாயகர்களின் படங்களில் நடிக்க மறுத்தார்.
அவருடைய எதிர்பார்ப்பு, ஏமாற்றத்தில் முடிந்தது. இப்போது சின்ன கதாநாயகர்களும் அவரை சீண்டாததால், ``அரசனை நம்பி... இழந்த கதையாகி விட்டது!'

பசுமைப் புரட்சி

மருத நிலமா பாலை நிலமா என்று புரியாத ஒரு பிரதேசத்தில் திருகு சொம்பு, தூக்கு வாளி தூக்கி வந்த உழத்தியிடம் உழவன் சொன்னது.

காலடியில் நிழல்பதுங்கும் உச்சி வேளை
காற்றே தீ போலாகிக் கருக்கும் நாளில்
நீலகிரி மலைக்குளிராய் வந்து சேர்ந்தாய்
குளிராக வந்தென்னைப் போர்த்திக் கொண்டாய்.
நாலுதிசை பார்த்துவிட்டுக் குறும்பு செய்தேன்
நாணமுள்ள பெண்ணாகக் காட்டிக் கொண்டாய்
ஆலமரம் அதில் காகம் இருப்ப தையே
அய்யய்யோ மறந்துவிட்டோம் போச்சே மானம்

கட்டைவிரல் வரிகள்போல் உழுது விட்டுக்
களத்துமேட்டில் ஓய்வெடுக்கும் டக்கர் வண்டி
கட்டழகே எனக்குமட்டும் ஓய்வில் லையா?
களைச்சிருக்கேன் எங்கேம்மா தூக்கு வாளி?
விட்டுவிட்ட பாகங்கள் மண்ணில் கூட
வெளிறிப்போய்க் காத்திருக்கும் கலப்பைக்காக.
திட்டமிட்ட பரப்பெல்லாம் உழுது விட்டுத்
திரும்பிவந்த பின் தணிப்பேன் உனது தாகம்.

திருச்செந்தூர் ரோட்டிலுள்ள தொழிற்சா லையில்
டீ.ஏ.பி உற்பத்தி தொடங்கி ருச்சாம்
உரக்கடையில் உன் தம்பி தகவல் சொன்னான்
ஒத்தாசை செய்வதாக ஒத்துக் கிட்டான்.
அரைக்கிணறு நிறைஞ்சிருக்கே ஆச்சர்யந் தான்.
அங்காள ஈஸ்வரியின் அருள் தான் எல்லாம்.
எரிஞ்சுபோன மோட்டாரில் காயில் மாத்தி
ஏழுநாளில் கட்டவேணும் வாய்க்கால் பாத்தி.

பம்பு செட்டு மூணுநாளு வேணுமின்னு
பங்காளி கேட்டிருக்கான், கொடுக்க லைன்னா
வம்பாகி வாய்க்காலில் தண்ணி யில்ல
வாங்கிய கை துண்டாகி ரத்தம் பாயும்.
எம்பாகம் பெரிசுன்னு சொல்லிப் பாத்தும்
எடுபட்ட பயலுக்குப் புரிய வில்ல
கொம்பு சீவி நிக்கிறாண்டி காதைப் பொத்தி.
கிறுக்கனுக்குக் கழண்டுருச்சோ இருக்கும் புத்தி?

பருத்தியுடன் உளுந்தையும் போட வேணும்
பக்கத்தூர் ஆட்களைத்தான் தேட வேணும்.
கரண்டுசப்ளை தினம் மதியம் வருமின் னாங்க.
கண்ணுலயே கரண்டெப்படி வச்சி ருக்கே?
சரிஞ்சிருக்கு முந்தானை எடுத்துப் போடு
சரி சரி நான் என்ன சொன்னேன் எங்கே விட்டேன்?
மறுகரையில் கொத்தூரில் ராமசாமி
மருந்தடிக்கக் கூப்பிட்டாத் தட்டமாட்டான்

பட்டணத்தில் விவசாயம் படிச்ச நம்ம
பலசரக்குக் கடைக்காரர் மவந்தான் சொன்னான்
சொட்டுகூட இஸ்ரேலில் வீணாகாம
சிந்தாமச் சிதறாமப் பாய்ச் சுறாக.
நட்டமென்ன நம்மசனம் கத்துக் கிட்டா?
நம்மபுள்ள காலத்தில் நிலம மாறும்.
வெட்டவெளி ஆகாயம் கிணத்த நம்பி
வெள்ளாமை காத்திருந்தா என்ன தேறும்?

ஓடோடி வந்து பாத்தா உச்சி வானில்
ஊர் தாண்டிப் போகுதடி பாழாய்ப் போன
நாடோடி மேகங்கள் நம்ப வேண்டாம்.
நீர்வேண்டி மழைக் கஞ்சி கேட்க வேண்டாம்.
ஆடாமல் அசையாமல் ரயில் ரோட்டோரம்
ஆமணக்கு நிக்குதடி வானம் பார்த்து.
ஓடாத ஓடைக்குள் மணற்ப ரப்பில்
ஒருவருஷம் ஆச்சுதடி ஈரம் பார்த்து.

வெல்லத்தை இப்படித்தா, கூழை ஊத்து
வெஞ்சனம் உன் விரல்பட்டுத் தித்திப் பாச்சு
கல்விளைஞ்ச பூமியைநம் பாட்டன் பூட்டன்
பொன்விளையத் திருத்தித்தான் வச்சிருக்கான்
எல்லாமே சரியாகப் போச்சு துன்னா
ஏழெட்டுப் பவுனெடுத்துத் தாரேன் புள்ள
இல்லாமப் போனாலும் குத்தமில்ல
இந்தியாவின் நிதிநிலம மோசமில்ல.

மறந்து விட்டான்-கவிதை

ரோஜாவின் நிறத்தைப்
பிரித்து உதடுகள்
செய்து விட்டான்
உனக்கு பிரம்மன்...


நிலவை பிழிந்தெடுத்து
உன் முகத்தைச் சமைத்து
எம்மைக் குளிர்வித்துவிட்டான்...

சூரியனின் ஒளியைப்
பறித்து உன் கண்களைப்
படைத்து என்னை
கண்ணற்றவன் ஆக்கிவிட்டன்..

முத்துக்களைக் கோர்த்து
பல் வரிசைகளை தைத்துனக்கு
ஆட வைத்து விட்டான்
என்னை.....

ஏனோ உன் இதயத்தை
மட்டும் குத்திக் கிழிக்கும்
முட்கள் கொண்டு படைத்து
விட்டான்..

அழகுகள் இருக்கும் இடத்தில்
ஆபத்தும் இருக்கும் என்பதை
எங்களுக்கு நினைவுப்படுத்தவோ....

கவிதை -- உன்னை உனக்கு முதலில் அறிமுகம்

உன்னை உனக்கு முதலில் அறிமுகம்

உன்னை உனக்கு
முதலில் அறிமுகம் செய்தது
நான்தான் !

என் கனவுகளை
அடுக்கியபோது
சரியாய் உன் உயரம் இருந்தது

அடர்த்தியான மழையின்
சப்தம் நான்
மழைக்குப் பின் வரும்
நிசப்தம் நீ

கனவுகளின் கனவு நீ

காற்றைப் பிசைந்து
பொம்மை செய்ய
கடவுள் முயற்சிக்கையில்
நீ கிடைத்தாய் !

காதல்
எனக்குப் பேச்சுப் போட்டி
உனக்கு மௌன விரதம்

பிரம்மன் படைத்த ஓவியம் நீ
அவன் தூக்கிப் போட்ட தூரிகை
நான்

உன் காதல் கிடைக்குமென்று
நான் எற்கெனவே
சபிக்கப்பட்டிருக்கிறேன் !

நம் வாழ்வில்
மன்னிக்க முடியாத தவறு
நம் முதல் சந்திப்பு

மரணமற்ற வாழ்விக்கு
சாத்தியம் இருந்தது
உன்னைப் பார்க்கும் முன்

என் காதலை
ஏற்றுக்கொண்டபோது
அழகாய் இருந்தாய்
மறுத்தபோது
இன்னும் அழகாய் இருந்தாய் !

பூமி ஒரு மைதானம்

பூமி ஒரு மைதானம்
கோல் விழுந்தா கொண்டாட்டம் !

எட்டி எட்டி உதைக்கிறாங்க
எனக்குப் புடிக்கலை
உசுரில்லாத பந்துன்னாலும்
மனசு கேக்கலை

ஒரு பந்து படும் உதையை
உலகமெல்லாம் பல பேரு
கை தட்டி ரசிக்கிறாங்க
என்ன நியாங்க ?

பட்ட உதை எத்தனையோ
லாபம் என்னங்க ?
பந்துக்கா குடுக்குறாங்க
பரிசு சொல்லுங்க ?

புத்திசாலி மனுஶனுங்க
புரிஞ்சுபோச்சுங்க
பந்துக்குத் திருப்பி உதைக்க
பாதம் இல்லீங்க !

மனுஶன் காற்றடைத்த
பந்துதானுங்க
மூச்சுக்காத்து நின்னுச்சுன்னா
முடிஞ்சுபோச்சுங்க

பூமியொரு மைதானம்
போட்டி போடுங்க
எத்தனை பேர் தடுத்தாலும்
ஜெயிக்கப் பாருங்க

கோல் விழுந்தா கொண்டாட்டம்
கையைத் தட்டுங்க
அது வரைக்கும் போராட்டம்
ஆட்டம் நடத்துங்க

ஓண்ணு மட்டும் சொல்லிக்கிறேன்
வெற்றி நிச்சயம்
உதைக்கும் போதும் துள்ளிக் குதிக்கும்
மனசு முக்கியம் !

சிரியுங்கள்

சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்
அழுங்கள், நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்.

இன்று வாழ்வில் நாம் திரும்பிப் பார்க்கும் திசையில் எல்லாம் தெரிபவை இரண்டு.
அவைகளில் ஒன்று திருப்தி. மற்றென்று பேராசை. இந்த இரண்டும் தனித்தனியாக்கூட
இல்லை. உள்ளங்கையும் புறங்கையும் போல ஒன்றின் இருபக்கங்களாக இருக்கின்றன.
யாரிடம் பேராசை இருக்கிறதோ அவரிடம் மறுபுறம் திருப்தியும் இருக்கிறது. கிடைத்தற்குப் திருப்திப்பட்டுக் கிடைக்க வேண்டியதற்காக உழைக்கும் ஆரோக்கியமான மனநிலை தென்படவில்லை.

காரணம், மன இறுக்கம், மன உளைச்சல்.

இந்த மன புகைச்சலிருந்து விடுபட உதவுவது மனம் விட்டு சிரிப்பது.
N.S. கிருஷ்ணன் பாடிய சிரிப்பு பாடலைப் பலரும் கேட்டு இருக்கலாம்.
சில சிரிப்புகளை சிறிது அலசுவோம்.

வாய்விட்டு சிரிப்பது - நமட்டு சிரிப்பு - வாயை மூடிக்கொண்டு சிரிப்பது - ஓகோ என்று சிரிப்புது- அவுட்டு சிரிப்பு - வெடிச்சிரிப்பு - 'களுக்'கென்று சிரிப்பு - பயங்கரமாய் சிரிப்புது - புன்சிரிப்பு - வயிறு வலிக்க சிரிப்புது - விழுந்து, விழுந்து சிரிப்புது - குபீரென்று சிரிப்பு - மனதுக்குள்ளே சிரிப்பு - உதட்டளவில் சிரிப்பு , வெறிச்சிரிப்பு - கலகலவென்று சிரிப்பு - 'பக்'கென்று சிரிப்பு- குலுங்ககுலுங்க சிரிப்பு- கடைசியாக வருவதுதான் *கபட சிரிப்பு* [விடுப்பட்ட சிரிப்பு இருந்ததால் தெரிவிக்கலாம்.]

நகைச்சுவை என்பது சில சமயம் கேலி செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. எதையும் கேலி செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும். அதை நகைச்சுவையோடு கேலி
செய்வதற்கு புத்திசாலிதனம் வேண்டும். அதுவும் பிறர் மனம் புண்படாமல் கேலிசெய்ய,
கேலி செய்வதற்கு பக்குவமான அறிவு வேண்டும். அத்துடன் சிந்தனையை தூண்டிவிட
தெளிந்த மனம் வேண்டும்.

சிரிப்பு ஆக்கபூர்வமமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது.
மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது.
அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். அவ்வளவுதான்.
சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்
[சிரிக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன் பல்லைக் கடித்துக்கொண்டு
இருந்தால்.... மன்னிக்கவும்.]

சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால், அது மிகையல்ல. கடந்த
20 ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும் , நோய்களுக்கும் இடையேயான தொடர்பை ஆராய்ந்து வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஒரு உண்மையைக் கண்டறிந்தனர்.

நமது எண்ணங்களுக்கும் மன நிலைக்கும் ஏற்றபடி உடலினுள் இயங்கும் செல்களின்
நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது குறைகிறது என்பதே அது. 1993-ம் ஆண்டின் இவ்வாராய்ச்சியில் ஒரு பயனுள்ள உண்மை கண்டறியப்பட்டது.
நமது நரம்புகள் ஒரு ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டுடிருக்கிறது. இதற்கு "CGRP" என்று பெயர். இதுதான் நரம்புகளுக்கு அடியிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களின் இயல்பை ஊக்குவிப்பதும், மட்டுப்படுத்துவதும். நமது மன அலைக்கு ஏற்ப 'CGRP' அதிகமாக
உற்பத்தியாக்கி உடலில், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக்கும். நாம் மனம் விட்டுச்சிரிக்கும் போது 'CGRP' அதிகமாகச் சுரக்கிறது என்பதுதான் ஆராய்ச்சியில் கண்டறிப்பட்ட உண்மை.

உலகின் மிகச் சிறந்த மருந்து மனம்விட்டுச் சிரிப்பதே என்று நியூயார்க் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆர்தர்ஸ்டோன் தன் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார்.
நாம் சிரிக்கும் போது நம் மூக்குனுள் உள்ள சளியில் 'ம்யூனோகுளோபுலின் ஏ'
[IMMUNOGLOBULIN-A] என்ற நோய் எதிர்ப்புப் பொருள் அதிகா¢த்து பாக்டீயாக்கல், வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாமல் தடுக்கிறதுதாம். இதனால் மனம்விட்டுச் சிரிப்பவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழலாம் என்கிறார் இந்தப் பேராசிரியர்.
மேலை நாடுகளில் டாக்டர்கள் நோயாளிகளுக்கு -சிரிப்பு வீடியோக்களைப் பார்க்குமாறு
பா¢ந்துரை செய்கிறார்கள்.

நேர்மன் கசின்ஸ்' என்னும் அமெரிக்க நாவலாசியாரியர் 1983-ம் ஆண்டு தான் எப்படி இதய நோயிலிருந்து மீண்டும் வந்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
''நான் மாரடைப்பு வந்ததுடன் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவித்தேன்.
எளிய உடற் பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டேன்.
விளையாட்டு, நடைப்பயிற்சியும் மேற்கொண்ட பிறகு, மீதி நேரங்களில் வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தேன். அதற்கென நகைச்சுவைப் படங்கள் டி வி -யில் பார்த்தேன். நகைச்சுவை வசனங்களை டேப் ரிக்கார்டில் கேட்டு மகிழ்தேன். என்ன ஆச்சா¢யம் ? நாளடைவில் என் இதயம் பலப்பட்டு நோய் இருந்த இடம் சுவடே தெரியாமல் மறைந்து போனது"

நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியைச் 'சிரிப்பு' முடுக்கிவிடுகிறது என்பதைச் சிரிப்பு பற்றி ஆராய்ந்த மருத்துவ அறிஞர் வில்லியம் பிரை தன்னுடைய ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார்.

சிரிப்பு பற்றி ஆராயும் மருத்துவ அறிஞர்களை ' GELOTO LOGIST என்கிறார்கள்.
இவர்கள் பலவித ஆய்வின் மூலம் கண்டறிந்த உண்மைகள் அவைகள்.

சிரிப்பு நம்மிடைய ரத்ததில் அதிகப்படியான ஆ க்ஸஜன் இருப்பதற்கான தசைகள்
வலுவடைகின்றன. ''இரத்த அழுத்தம்'' அளவு குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகின்றன.
'என்சீபேலின்ஸ்' என்ற ஹார்மோனை நம் உடலில் சுரக்கச் செய்து தசைவலியை நீக்க உதவுகிறது சிரிப்பு. சிரிப்பதனால் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம் அதிகா¢க்கிறது. மன இறுக்கம் தளர்கிறது

சிந்தைக்கும், உணர்ச்சிகளுக்கும் தலைமை பீடமாகச் செயல்படும் - நம் மூளையின்
வலப்பக்கப் பகுதி, சிரிப்பினால் நன்கு செயல்படுகிறது.
சிரிப்பு- பெப்டிக் அல்சர் போன்ற இரைப்பைப் புண்கள் வராமலேயே தடுக்கிறது.
உலக வாழ் உயிரனங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். சிரிப்பினால் எவ்வளவு
நன்மைகள் என்று சிரித்து பாருங்கள்.

எனவே, நோய்விட்டுப் போக மனம் விட்டுச் சிரியுங்கள்.
"சிரிக்க தொ¢ந்த சமுதாய விலங்கு மனிதன்" என நம்மை மற்ற இனங்களிலிருந்து
வகைப்படுத்தி அறிவியலார் கூறுவதுண்டு.

சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு
இல்லாத சிறப்பு.

மனிதனுக்கு பல சமயங்களில் மன இறுக்கத்தை குறைக்க, நட்பை வளர்க்க
ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழக, இடைவெளியை குறைக்க, மனத்தெளிவு, மனமகிழ்ச்சி
என பலவிதமான பயன்பாட்டில் திகழ்கிறது இந்த சிரிப்பு.
நகைச்சுவை மனிதனை சிரிக்க வைக்க மட்டும் இல்லாமல் அது வேறு பல
சுவைகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது.

''பெர்னாட்ஷ'' ஒரு சமயம். ''உண்மையான அறிவு என்பது நகைச்சுவையான சிரிப்பு
பின்னணியிலேயே செயல்படுகிறது' என்றார். நகைச்சுவையும், சிரிப்பும் அறிவை அளவிட்டு
காட்டுவதாக பெரும்பாலும் அமைகிறது.

நகையும் சுவையும் சிரிப்பும் அறிவு பூர்வமானது என்பதை மெய்ப்பிக்க, நமக்கு
அக்பர், பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவை சான்றாக இருக்கிறது.
அமரர் 'கல்கி' யின் படைப்புக்கள் நகைச்சுவை முலாம் பூசப்பட்டு மிளிர்பவைதான்.

இன்றைய கால கட்டத்தில் நமக்கு கொஞ்சம் நகைச்சுவையும், சிரிப்பும் பஞ்சம்
ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம். சமுதாய சூழ் நிலையும், மன உளைச்சலும் இதற்கு காரணம் கூறலாம்.

நம்மில் சிலர்- பொ¢ய பதவியிலுள்ளவர்கள் 'சிரித்துப் பேசக் கூடாது' என்று
கங்கணம் கட்டிக்கொண்டு இறுக்கமாகவே இருக்கிறார்கள்.
இந்தப் போக்கு மாறவேண்டும்.

நகைச்சுவை உணர்வால் மட்டுமே பொறுமை வளர்க்க முடியும். நண்பர்களிடத்தில்
தனித் தோற்றத்தையும், குடும்பத்தினரிடம் அதிகம் நெருக்கத்தையும் எந்த விதமான
இடர்பாடுகளையும் எளியதாகக் கையாளவும், சிறப்பாக நமக்கு உதவி செய்கிறது.
சிரிப்பது உங்கள் கடமை. மனிதனின் சோர்வை அகற்றுவது சிரிப்பு. சிரிக்கும் உணர்வு
இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும்.
மனதுக்கு தைரியம் அளிப்பது நகைச்சுவை உணர்வுதான். சிரிக்க கூடிய சக்திதான்.
சிரிப்பு 'கவர்ந்திழுக்கக்' கூடியது முகம். சிரித்த முகத்துடன் இருப்பவர்கள்,
அந்த புன்சிரிப்புதான் எத்தனை அழகானது!!!

இளமையான புன்னகை இனிமையான ஆன்மாவைக் குறிக்கிறது. கண்ணுக்குள்
தொ¢யமால் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அழகை வெளிப்படுத்துவது புன்னகை.
'மர்ரெ பாங்க்ஸ்' என்ற தத்துவ டாக்டர், இன்றைய உலகத்தின் நெருக்கடிகள்,
கஷ்டங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட, சிரிப்பு ஒன்றுதான் வழி. உங்களால் சிரிக்க முடிகிறது
என்றால் நல்ல மனத்தோடு இருக்கிறீர்கள் என்று பொருள். சிரிப்பு உங்களுக்கு
உடல் நலத்தைத் தருகிறது. செல்வத்தைத் தருகிறது. ஏன் அதை நீங்கள் விடவேண்டும்.?

இன்றைய் உலகம் இளையர்கள் கையில். இளையர்கள் சிரிப்பை விரும்புகிறார்கள்.
நீங்கள் சிரிக்காமல் இருந்தால் இளையதலைமுறையினர் நட்பை இழக்கிறீர்கள்.
உலகத்துடன் உள்ள தொடர்பை இழக்கிறீர்கள்.

இந்த பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது
மிக்க அவசியமாகிறது.

நல்ல நகைச்சுவைகளை அனைத்தும் நாம் தனியாக இருந்து சிரித்தாலும் நம்மை பற்றி மற்றவர்கள்,
''சாமிக்கு கொஞ்சம் மண்டை கிறுக்கு" என எண்ணக்கூடும்.

ஆகவே, அதனையும் கருத்தில் - கவனத்தில் கொண்டு சிரிக்கவும்,
மனம் விட்டு சிரிக்கவும். நலம் சிறக்கும்.

மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு...- அம்மா

ண்ணா! ராஜா! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீ ஒரே பையனாகப் பிறந்து வளர்ந்து, படித்துப் பட்டம் பெற்று கைநிறையச் சம்பாதிச்சு... இப்படி ஒவ்வொர காலகட்டத்திலும் உன் வளர்ச்சியை, உயர்வைக் கண்டு பூரித்திருக்கிறோம்.

திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப் படட்டும் என்று நீ சொன்னதனால்தான் இந்த ஏற்பாடுகள். நல்ல பெண், நல்ல குடும்பம்.. நல்லதே எண்ணுவோம்...! நல்லதே நடக்கட்டும். உலக நடப்பினைக் கண்டு உன் அப்பாவும் நானும் நிறையப் பேசிய பிறகுதான், திருமணம் ஆவதற்கு முன்னால் உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். இது உனக்கு வியப்பாக இருக்கலாம். பெண்ணுக்குத்தானே இப்படிச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறாயா? இல்லை கண்ணா... நாங்கள் மனம் திறந்து சொல்வதைச் சொல்லி விடுகிறோம். காதில் போட்டு வைத்தால் சில விஷயங்கள் மனதிலும் இறங்கும். அதுவே தக்க சமயத்தில் உதவக்கூடும்!

பெஸ்ட் அம்மா பெஸ்ட்!

இதுவரையில் பெண்ணென்று வீட்டில் உன் அம்மாவை மட்டுமே பார்த்திருக்கிறாய். அவள் சமைப்பதையும், வீட்டை வைத்துக் கொள்வதையும், பாடம் சொல்லித் தருவதையும் பாடுவதையும், கோலம் போடுவதையும், பண்டிகைகளை முழுமையாகக் கொண்டாடுவதையும் எதிலும் திறம்பட எடுக்கும் முடிவையும் பார்த்து என் அம்மாதான் பெஸ்ட் என்று எண்ணியதில் தப்பில்லை. உள்ளூர எனக்கு அது பெரிய கிரீடம்தான்!

இனிமேல் அதையே மனதில் அசைபோடாதே! அதைத் தாண்டி வா! அம்மா பெஸ்ட் என்ற உன் கருத்தை உள்ளத்தின் ஆழத்தில் மட்டும் வைத்துக்கொள். வார்த்தைகளில் உன்னவளுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. தாய் சொல்லைத் தட்டாதே! சிறிய முகமூடிதான். அதைத் திறம்படப் பயன்படுத்து! அது எல்லோரையும் மகிழ்விப்பதைப் புரிந்துகொள்வாய்.

தாய்க்குப் பின் தாரம்!

நலங்கு மஞ்சள் காயும் முன்பே பிரம்மதண்டத்தைத் தலையில் வைத்தது போல் எங்க அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்., அவர்களை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற வசனங்களைப் பேசாதே! அப்படிச் சொன்னால் அவளுக்கு மனதில், அப்படியானால் அம்மா பிள்ளையாகவே இருக்க வேண்டியதுதானே. அப்புறம் எதுக்கு நான்? என்று சிறு கசப்பு உணர்வு தோன்றும். அவள்தான் உன் உலகம் என்பதை அவளுக்குப் புரியவை. அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்றும் சொல்லாதே! அதையே என்றாவது உன் மீது திருப்பக் காரணமாக நீ இருக்கக்கூடாது. சண்டையில்லாவிட்டால் நீ கேட்டதெல்லாம் கிடைத்திருக்குமா?

காபியை சர், புர் என்று உறிஞ்சிக் குடிக்காதே. உனக்கொரு மனைவி வந்தால், நல்லா வளர்த்திருக்கா என்று என்னைக் குறை சொல்வாள் என்று அடிக்கடி சொல்வேனே. இன்று உன்னுடைய நடை உடை பாவனையில் உயர்வைக் கண்டு நான் பூரிக்கிறேன். வரப் போகிறவள் பெருமையடைவாள். நல்ல ஆசானாகப் பணி ஆற்றிய நிறைவு எனக்கு.

தாயா? தாரமா?

அம்மா சமையலைத் தவிர வேறொன்றும் நீ அறியாததால் அது மிக உயர்வாக உனக்குத் தோன்றுவதில் வியப்பில்லை. இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை, எங்க அம்மா செய்கிற மாதிரி சேப்பங்கிழங்கு ரோஸ்ட், முருங்கைக்காய் சாம்பார் மாதிரி வராது என்று ஒப்பிட்டுப் பேசாதே! உன் அம்மாவுக்கு உன் மனைவியாகப் போகிற பெண்ணைப் போலக் கார் ஓட்டவும், வங்கிப் பணி ஆற்றவும், டைம் மேனேஜ்மெண்ட்டும் தெரியாதப்பா! நான் அன்றைய கெட்டிக்காரி! இவள் இன்றைய மங்கை!

அம்மாவின் கட்டளைகள் ஆறு!

உனக்கு உன்னிடம் உள்ள பேரன்பை மனதில் கொண்டு நான் சொல்லும் அறிவுரைகள் ஆறு:

1. அம்மா புராணம் பாடாதே!

2. அம்மாவோடு ஒப்பிடாதே!

3. அம்மாக் கோண்டு என்ற பட்டம் பயன் தராது!

4. அம்மாவைக் கொஞ்சம் பீடத்திலிருந்து இறக்கி வை. அவளும் சற்று இளைப்பாறட்டும்!

5. அம்மா தேவைப்பட்டபோதெல்லாம் உதவிக்கு வருவாள் என்பதை மட்டும் சொல்லி வை!

உன்னவளுடைய அம்மாவையும் மதிக்கக் கற்றுக் கொள்!

பி.கு.

மாமனாரை உயர்த்திப் பேசுவதால் மருமகளுக்கு எந்தவித கசப்பும் ஏற்பட்டதாகச் சரித்திரமே கிடையாது! ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி... நீடூழிவாழ வாழ்த்துக்கள்!