கணவன் VS மனைவி - நகைச்சுவை

கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..? 

மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி 
சொல்றீங்க..! 

******************************​***************** ***********************************

கணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற ? 

மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா 
இருக்கேன்னு..! 

******************************​***************** ***********************************

மனைவி : என்னங்க.. நீங்க புட்டிப் பால் குடிச்சு தான் வளர்ந்தீங்களா ?

கணவன் : எப்படி கண்டுபுடிச்சே? 

மனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில 
நூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..! 

******************************​***************** ***********************************

கணவன் : ஏன் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமாக வந்திருக்கு ? 

மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா? 
தினமும் s t d போட்டு சண்டை போட வேண்டியதாப் போச்சு... 

******************************​***************** ***********************************

மனைவி : என்னை நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க .. 

கணவன் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று.. 

******************************​***************** ***********************************

டாக்டர் : உங்க மனைவி உடம்புக்கு என்ன வியாதி ? 

கணவன் : அதுதான் தெரியல டாக்டர்! 
ரெண்டு நாளா என் அம்மாவைப் புகழ்ந்து ரொம்ப பெருமையாப் 
பேசுறா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..!

******************************​***************** ***********************************

மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க

கணவன்: ஒண்ணுமில்ல!

மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட 
பார்த்துகிட்டு இருக்கிங்க!

கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

******************************​***************** ***********************************

மனைவி: டின்னர் வேணுமா?

கணவன்: சாய்ஸ் இருக்கா?

மனைவி: ரெண்டு இருக்கு!

கணவன்: என்னன்ன?

மனைவி: வேணுமா?வேண்டாமா?

******************************​***************** ***********************************

பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் 
நான் பங்கெடுத்துகுவேன� �!

ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!

பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!