நகைச்சுவை - 16


  • காலில் என்ன காயம்?

    செருப்பு கடிச்சிடுச்சுங்க!

    பின்ன அதை மிதிச்சா, அது சும்மாவா இருக்கும்?

  • மெழுகுவர்த்தி தொழில் பண்ணனீங்கேள, என்னாச்சு?

    கையை சுட்டுருச்சு.

    கப்பல் போவது பெட்ரோலிலா, டீசலிலா?

    கடலில்.

  • அடுக்கு மாடி கட்டிடத்தில் 2 பேர் வசித்தனர் ஒருவர் முதல் மாடியில் இன்னொருவர் எட்டாம் மாடியில் இருவருக்கும் இரண்டு நாளாக சொல்ல முடியாத பகை கோபம். சண்டை ஒரு சமயம் எட்டாம் மாடியில் இருந்தவன், முதல் மாடியில் இருப்பவளை அவமானப்படுத்த நினைத்தான்.

    எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வரவும் என்று வேண்டுகோள் விடுத்தான். கைபை மறந்து போகிறதே என்று ஏமாந்த முதல் மாடிக்காரனும், கஷ்டப்பட்டு எட்டாம் மாடிக்கு சென்றான். வீடு பூட்டியிருந்தது ஒரு போர்டு முன்னால் தொங்கிக் கொண்டிருந்தது. அதில் உன்னை எப்படி ஏமாற்றினேன் பார்த்தாயா? என்று எழுதியிருந்தது. முதல் மாடிக்காரன் ஏமாந்ததாககாட்டிக் கொள்ளக்கூடாது என்று நினைத்து அந்த போர்டின் வாசகத்திற்கு கீழே இப்படி எழுதினான்.

    நான் தான் வரவே இல்லையே எப்படி ஏமாற முடியும்!

  • கண்ணகி குடிச்சுட்டு போதையில போனது தப்பாப் போச்சு

    ஏன்?

    தீயணைப்பு வண்டிகள் இல்லாத காலம்.

  • ஹேலோ அது நான் பார்த்து வெச்சிருக்குற செருப்பு, நீங்க வேற ஏதாச்சும் எடுத்துக்குங்க

    அடப்பாவி இது என்னோட சொந்த செருப்புய்யா.

  • தோட்டத்தில் சோகமாக இருந்த சிறுமியை பார்த்து பக்கத்து வீட்டுப் பெண் கேட்டாள்.

    ப.பெண் - இந்த தனியா என்ன பண்ணிட்ருக்கே?

    சிறுமி - செத்துப்போன என் கோல்டன் பிஷ்ஷை புதைச்சிட்டிருக்கேன்.

    ப.பெண் - அதற்கு எதற்கு இவ்வளவு பெரிய குழி?

    சிறுமி - என்னோட கோல்டன் பிஷ் எங்களோட பூனை வயித்துலதானே இருக்கு.

  • எட்டு பொருள் வாங்கிட்டு வர சொன்னா ஏழு பொருள் வாங்கிட் டு வந்தானா யார் அவன்?

    ஒன்னு விட்ட தம்பி.