| அந்த டேபிள்ல என்னய்யா தகராறு? பேமிலி ரோஸ்ட் சாப்பிடுறதுல பாகப் பிரிவினை தகராறாம் முதலாளி. 
  | ||
| அந்த மந்திரவாதி ஏற்கனவே ஆட்டோ டிரைவரா இருந்திருப்பார்ன்னு எப்படி சொல்றே? பேயை ஓட்டணும்னு சொன்னேன்...! மீட்டருக்கு மேலே எவ்வளவு போட்டுக் கொடுப்பேன்னு கேட்குறாரு! 
 தெரியலையே? இன்னொரு சிங்கம்...!  | ||
| கப்பல் ஏன் ஆடுது? அது எப்பவும் தண்ணியில் இருக்கே அதான். 
  | ||
| எங்க சார் உங்களை பார்க்கவே முடியலை....? அடடடா போன மாசம் கூட அடையாளம் கண்டுகிட்டு பேசினீங்களே...! 
  | ||
| கல்யாண வீட்ல, ரொம்பநேரமா செருப்புகளை உத்து உத்து பார்க்கறீங்கேள, உங்க செருப்பை கானோமோ? ம்ஹும், நல்ல டிசைன் செருப்பா தேடிக் கிட்டிருக்கிறேன். 
  | ||
| கல்யாண மண்டபத்தில் சார், செருப்பை எங்க போடனும்...? என்ன முட்டாள்தனமான கேள்வி. கால்ல தான் போடனும்! 
  | ||
| அவர்கிட்ட யாரும் ஐஸ் வைக்க முடியாது. ஏன்? ஏன்னா, அவர் ஐஸ் வியாபாரம் செய்றவர்! 
  | ||
| அவர் ஒரு பகுத்தறிவுவாதி அதுக்காக 4 வடையை வாங்கி சாப்பிடாம பிச்சு பிச்சு பார்க்கணுமா....! 
  | ||
| மயிலே, மயிலேன்னா மயிலு இறகு போடாது? ஏன்? இறகு போட சொன்னாதானே போடும். 
  | ||
| அந்த பிராந்தி கடையில ஏன் இவ்வளவு பெண்கள் கூட்டம்? இரண்டு பிராந்தி பாட்டில் வாங்கினா. ஒரு ஜாக்கெட் பிட் இலவ சமாம்...! 
  | 

