நான் ரசித்த சில நகைச்சுவைகள்


இந்தப் படத்துல அடிக்கடி மதியச் சாப்பாட்டைப் பற்றியே கதாநாயகன் வசனம் பேசறாரே... ஏன்?.


அது லஞ்ச் டயலாக்காம்..!

---------------------------------------------------------------------------

தொப்பையைப் பார்த்து ஜோசியம் சொல்றாரே... யார் அவர்?

அவர் போலீசுக்கான ஸ்பெஷல் ஜோசியராம்..!



---------------------------------------------------------------------------

மன்னா... உங்களுக்குச் சொந்தமான
பகுதியைக் கைப்பற்ற, எதிரி மன்னர்கள் மோதிக்கொள்கிறார்கள்!

எனக்குச் சொந்தமான பகுதியா... எது அது?

உங்கள் முதுகுதான் மன்னா!


---------------------------------------------------------------------------

எதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி கொண்டு வந்து வைக்கிறே..!

நீங்கதானே மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டப் போறேன்னு சொன்னீங்க..?


---------------------------------------------------------------------------


ஆபரேஷனுக்கு முக்கியமான டிப்ஸ் தர்ற மெடிக்கல் வெப்சைட் அட்ரஸ் தர்றதா சொன்னேன்... இந்த மாசம் சம்பளம் ரெண்டாயிரம் ஏத்திட்டார்!



---------------------------------------------------------------------------

நேத்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை...கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு வந்தேன்!

உன் பொண்டாட்டியையா..?

இல்ல... சைக்கிளை!

---------------------------------------------------------------------------

என்னதான் ஸ்டன்ட் மாஸ்டர் மகனா இருந்தாலும், வேலைக்கு அப்ளை பண்றப்போ... அப்ளி கேஷன் கூட ரெஸ்யூம் தான் வைக்கவும்; டிஷ்யூமை வைக்க முடியாது!

சண்டையை வைத்து மண்டையை பிய்த்துக் கொண்டு சண்டேயில் தத்துவம் எழுதி, சண்டே போஸ்ட் செய்வோர் சங்கம்

2 comments:

Philosophy Prabhakaran said...

லஞ்ச் டயலாக், சைக்கிள் காமெடிகள் கலக்கல்...

நாவலந்தீவு said...

மனசு விட்டு சிரித்தேன் . நன்றி தலைவா...

Post a Comment