அரசியல் நகைச்சுவை

நம்ம தலைவர் ஏன் உடம்பு இளைக்கிற மருந்தை வாங்கிட்டு
சாப்பிடாம இருக்காரு ?

நாளைக்கு அவருக்கு கட்சில எடைக்கு எடை தங்கம் தரப்போராங்களாம்

-----------------------------------------------------------------------------------------------------------------------

தலைவரே !.. எதிர்க்கட்சி தலைவருக்கு நீங்களே உங்க சொந்தச் செலவுல ஏன் சிலை வக்கிறீங்க ?

நடுரோட்ல உன்னை நிறுத்திக் காட்டறேன்னு சாவால் விட்டிருக்கேனே ?

-----------------------------------------------------------------------------------------------------------------------

மேடையில தலைவர் இப்படிப் பேசியிருக்க கூடாது.....

என்ன பேசினார் ?

தலைக்கு ஐம்பது வாங்கிக் கொண்டு லாரியில் ஏறி வந்திருக்கும்
ஜால்ராக்களேன்னு சொல்லிட்டாரு......

-----------------------------------------------------------------------------------------------------------------------

நம்ம தலைவரோட செல் நம்பர் இருபத்தாறு...

என்னது இரண்டு நம்பர்தானா ....?

நான் சொன்னது...... ஜெயில்ல அவரோட செல் நம்பர் !

-----------------------------------------------------------------------------------------------------------------------

தலைவருக்கு ஜீரன சக்தி அதிகம்னு சொல்லுறியே...... எப்படி ?

கோடி கோடியா முழுங்கிறாரே.... !