நகைச்சுவை - 10


 • 5ல் 7 போகுமா?

  பக்கத்தில் கடன் வாங்கினால் போகும்.

 • அவார்டு கொடுத்திருக்காங்க ஒரு ஊருக்கு

  என்ன ஊரு....?

  விருதுநகர்

  என் வாழ்க்கையே இருண்டு போச்சு கமலா

  ஏங்க, என்னாச்சு?

  எனக்கு நிரந்தரமா நைட்டூட்டி போட்டுட்டாங்க

 • குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்னு சொல்லு?

  தெரியைலேய?

  குளிக்கும் போதே துவட்ட முடியாதே.

 • கோழி ஏன் முட்டை போடுது?

  அதுக்கு 1,2,3, தெரியாது அதான் முட்டை போடுது,

 • தெய்வ காரியத்துல ஈடுபட்டப்ப, என்னை போலிஸ் கைது பண்ணி டுச்சு.

  அப்படியென்ன பண்ணுனீங்க..?

  சாமி சிலையை பெயர்த்து எடுத்துக் கிட்டிருந்தேன்.

 • நீங்க யாரு என்ன சொன்னாலும் ஆமான்னு சொல்வீங்களா?

  ஆமா