பஸ் நகைச்சுவை


 • இப்ப புறப்புட்டு போன பஸ் எங்கையாவது போய் விபத்தாகிடும்னு சொல்றீங்கேள நீங்க என்ன ஜோசியரா?

  இல்ல, இந்த பஸ் டிரைவர்.

 • பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன சொன்னார்?

  ரைட் சொல்லிவிட்டார்.

 • பஸ்ஸில் 2 பின் போகுது. ஒரு பின் சீட்டில் உட்கார்ந்து விடுகிறது. ஒ ரு பின் படிக்கட்டில் நின்று கொண்டு வருகிறது. எது முதலில் இறங்கும்.

  நின்ற பின் தான் முதலில் இறங்கும் ஏன் என்றால் பஸ்ஸில் நின்ற பின் இறங்கவும் என போர்டு போட்டிருக்கே.

 • பஸ் ஸ்டாண்டில் ஏன் பஸ் நிற்குது?

  அதனால் உட்கார முடியாது.

 • நேத்து பஸ்சுக்காக 3 மணி நேரம் காத்துக் கிட்டு நின்னேன்.

  அப்புறம்....?

  கால் வலிச்சதால உட்கார்ந்திட்டேன்.

 • கண்டக்டரே, அடுத்த ஸ்டாப்பில் நான் இறங்கணும்.

  அதை ஏன்யா எங்கிட்ட சொல்றே, அதோ ட்ரைவர் தூங்கிட்டிருக்கார், எழுப்பி அவர் கிட்டே சொல்லு.

 • 3 யானை பஸ் ஸாண்டிற்கு வந்தது. பஸ்ஸில் 2 யானை மட்டும் ஏறியது 1 யானை ஏறவில்லை ஏன்?

  அது வழியனுப்ப வந்தது.

 • பஸ்ஸீல் சீட் இருந்தும் நின்னுகிட்டே வந்தேன்

  சீட் இருந்தும் ஏன் நின்னுகிட்டே வந்தீங்க?

  சீட்டில் எல்லோரும் உட்கார்ந்திட்டிருந்தாங்க  பஸ்ஸில் போகும் போது என் பையில் ஒருத்தன் பிளேடு போட்டுட்டான்.

  அப்புறம் என்னாச்சி

  பிளேடை தூக்கி வெளியில் போட்டு விட்டேன்.