சினிமா நகைச்சுவை - 1 • உங்க படத்துல கதாநாயகனும், கதாநாயகியும் பாட்டுப் பாடிகி ட்டே சண்டை போடறாங்கேள ஏன்?

  அது சண்டை இல்லைங்க டான்ஸ்.

 • நான் நடிகையா இருக்கிறதாலேயோ என்னேவா, என் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் என்னை பார்த்துப் பயப்படறாங்க.

  வீட்டுல இருக்கும் போது நீங்க மேக்கப் போட மாட்டீங்களோ என்னேமா.

 • ஸ்டண் மாஸ்டைர கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சடி.

  ஏன்?

  வீட்டுக்குள்ள வரும்போது கூட, கண்ணாடி ஜன்னலை உடைச்சிக்கிட் டுதான் வர்றாரு.

 • எங்க படத்துல டயலாக் கிடையாது. டைட்டிலும் கிடையாது.

  ஆர்ட் ஃபிலிமா?

  இல்லை....! ப்ளு பிலிம்

 • நான் ஹீரோயினா நடிக்கிற படத்தோட காஸ்ட்யூமை நைஸா வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடுவேன்.

  ஓ ஹோ... அதான் வீடு நிறைய கர்சீப், ரிப்பனா இருக்குதா?

 • அந்த நடிகையோட அளவு 36:26:36:0

  அதென்ன சைபர்?

  அவளோட அறிவு

 • படம் போட்டதும் எல்லோரும் தும்முறாங்களே ஏன்?

  மசாலா படம் ஆச்சே

 • படம் பயங்கர சஸ்பென்ஸா போகுது...!

  படம் முடிய போகுது இன்னும் ஹீரோயாருன்னே தெரியல்ல...!

 • கவர்ச்சி நடிகைகள் பலரை வைத்து படமெடுக்கிறீங்களே, என்ன டைட்டில்?

  தொப்புள் தேசம்.

 • உங்க கர்நாடக கச்சேரிக்கு நேத்து வந்தேன். டிக்கெட் கிடைக்கலை.

  டிக்கெட்டெல்லாம் வித்திருக்குமூ

  அதான் இல்லை, டிக்கெட் விற்கிறவர் ரொம்ப மன்றாடி வேண்டவே வேண்டாம் போகாதீங்க என்று அமுதார் அதான்.

 • அதென்னங்... படத்துல அடிக்கடி தேவையில்லாம ஒருத்தரு கோவணம் கட்டிக்கிட்டு, மொட்டைத் தலையோட வந்துட்டு போயிட்டிருக்காரு!

  எப்படியும் படம் ஊத்திக்கும்னு தெரிஞ்சு, தயாரிப்பாளர் தான் அப்படி நடிச்சிருக்கறாரு!

 • ஜாக்கிஜான் கிட்ட உட்காருங்கன்னு சொன்னா உட்கார மாட்டார்

  ஏன்?

  அவருக்கு தமிழ் தெரியாது

 • ராதிகாவிற்கு பிடித்த விநாயகர் யார்?

  சித்தி விநாயகர்.

 • நான் சினிமாவுல புகுந்து பெரிய ஆளா வரமுடியாம ஒரு ஆளு தடை பண்ணிக்கிட்டிருக்கான்.

  யார் அது?

  ஏ.வி.எம். ஸ்டுடியோ வாட்ச்மேன்.

  நானும் என்மனைவியும் தெய்வமகன் படம் பார்த்து வந்த உடன் தான் எங்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தது

  நல்ல வேலை நீங்கள் அலிபாபாவும் 40 திருடர்களும் படம் பார்க்கவில்லை.

 • கதாநாயகியோட முகத்தை அடிக்கடி க்ளோஸ் அப்ல காட்ட வேணாம்னு சொன்னேனே...! கேட்டீங்களா?

  ஏன்யா...! என்னாச்சு?

  பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க.