நகைச்சுவை - 13


 • நான் 5 ரூபாயோட சென்னைக்கு வந்தேன்.

  அப்படியா?

  இன்னொரு 5 ரூபாய் கொடு திரும்பி கிராமத்துக்கே போய் விடுகிறேன்.

 • பேச முடியாத வாய் எது?

  செவ்வாய்

  உங்க பட்டாசு கடை எப்படி தீப்பிடிச்சது?

  மழை பெஞ்சதால, கடைக்குள்ள தீமூட்டி குளிர் காய்ஞ்சேன்.

 • உட்கார முடியாத தரை எது?

  புளியோதரை.

 • காக்கா ஏன் கறுப்பா இருக்கு?

  அது வெயிலில் சுற்றுவதால்.

 • எல்லா ஒட்டப்பந்தயதுல நீங்க ஜெயிச்சிடுகிறிகளே, எப்படி?

  என்னை கடன்காரங்க துரத்துறதாநெனைச்சுபேன், அப்புறம் வெற்றிதான்.

 • மாப்பிள்ளை அழைப்பு எங்கியிருந்து ஆரம்பம்!

  சென்டரல் ஜெயிலில் இருந்து.

 • உங்க வீட்டு வேலைக்காரிக்கு மட்டும் அம்பது ரூபா அதிக சம்பள ம் தர்றியாமே எதுக்கு?

  பக்கத்து வீட்டு நியூஸை எல்லாம் கேஸெட் பதிவு பண்ணி கொடுத்துவாளே

 • தபால்காரர் கீழே விழுந்தால் எப்படி விழுவார்?

  தபால்ன்னு தான்.

 • ராமுவும், சோமுவும் குலப்பெருமை காரணமாக வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

  ராமு சூயஸ் கால்வாயை கேள்விப்பட்டிருக்கிறாயா?

  சோமு ஏன் இல்லை. நன்றாகத் தெரியும். எகிப்தில் உள்ளது.

  ராமு அதை தோண்டியதே என் அப்பாதான்.

  சோமு இதென்ன பெரியசாதனை? நீ இறந்த

 • கையில் கட்டையோடு எப்போதும் அலைகிறாரே அவர் யார்?

  கட்ட பிரம்மச்சாரி

 • கடல் பக்கத்தில் லைட் ஹவுஸ் கட்டிருக்கிறார்கள் ஏன்?

  லைட் ஹவுஸ் பக்கத்தில் கடலை கட்ட முடியாது அதான்.