பள்ளிகூடம் நகைச்சுவை
பா எத்தணை வகைப்படும்? அவையாவைன்னு சொல்லு?

ஐந்து வகைப்படும் சார் அவை ஆசிரியப்பா, கலிப்பா, வெண்பா, வஞ்சிப்பா, படையப்பா.

 • 100ல் 1 போனால் மீதி எவ்வளவு?

  00

  மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.

  ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா.

 • ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?

  அது வாயில்லா பிராணி சார்.

 • படிச்சு முடிச்சப்புறம் என்ன செய்யலாம்னு இருக்கே...?

  புக் கை முடிவிடலாம்னு இருக்கேன் சார்.

 • உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்ச?

  கையை நீட்டு...?

  நீங்களும் அதே தப்பை தான் சார் பண்றீங்க...!

 • மெதுவாக நடந்து வந்தவர் பள்ளிக்கூடம் வந்ததும்

  ஏன் திடீரென ஓடுகிறார்.

  கேம் 20 மீட்டர் என போர்டு போட்டிருக்கிதனால்.

 • ஏன் உங்க பையன் ஸ்கூலில் ஸ்கேல் வைத்து கொண்டு தூங்குகிறான்?

  அவன் அளவோடு தூங்குகிறானாம்...!

 • அந்த பூனை ஏன் இந்த ஸ்கூலை சுற்றி சுற்றி வருது?

  அது எலிமென்டரி ஸ்கூல் என்பதால்.

 • ஆசிரியர் - சுத்தம் சோறு போடும்

  மாணவன் - சார் அப்படியென்றால் எதுசார் கொழும்பு ஊத்தும்.

 • தேள் கொட்டி விட்டால் முதலில் என்ன செய்யேவண்டும்?

  ஸ்கூலுக்கு லீவு போடவேண்டும்.

 • 8 ஐயும் 8 ஐயும் கூட்டினால் 9வரும் எப்படி?

  தப்பா கூட்டினால் வரும்.

 • ஏண்டா லேட்டு...?

  பள்ளிக்கூடம் மெதுவாக செல்லவும்னு போர்டு போட்டிருந்துச்சு சார்.

 • ஏண்டா பக்கத்து பையனை பார்த்து பார்த்து பரீட்சை எழுதுற?

  பரீட்சையை நல்லா பார்த்து பார்த்து எழுதுன்னு எங்க அப்பாதா ன் சொன்னார் சார்!