காதலர்கள் நகைச்சுவை


 • ஓடிப்போயிடலாமா டார்லிங்?

  ஏன் இப்படி பயந்து சாகிறீங்க நடந்தே போகலாம்.

 • எத்தனை தடவை திரும்பி சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது?

  திருப்பிச் சொன்னா எப்படி புரியும்? நேரா சொல்லுங்க.

 • அரசியல்வாதியின் மகளைக் காதலித்தது தப்பாப் போச்சு

  ஏன்?

  காதலை வாபஸ் வாங்கிக் கொள்வேன் என்று அடிக்கடி மிரட்டுகிற ரள்.

 • காதலியை பார்க்க போகும் போதெல்லாம் அவர் ஏன் கற்பூரம், வாழைப்பழம், தேங்காய் வாங்கிட்டு போகிறார்?

  அது தெய்வீக காதலாம்.

 • எதுக்குடா கால்குலேட்டருடன் அந்த பொண்ணு பின்னாடி சுத்துறே?

  கணக்கு பண்ணிட்டு இருக்கேன்.

 • என் காதலர் ரொம்ப சஞ்சத்தமா இருக்காரு

  என்னாச்சு?

  பீச்சுல பாதி சுண்டலை சாப்பிட்டு, மீதியை மணல்ல புதைச்சு வை நாளைக்கு எடுத்து சாப்பிடலாம்னு சொல்லாரு...!

 • என்ன தொடாம காதலிங்கசுரேஷ்

  சரி கோவிச்சுக்காத, சுண்டல் வாங்கித் தர்றேன்.

 • முன்னெல்லாம் என் லவ்வர் பீச்சுக்கு கூட்டிட்டு போனா கடலை வாங்கித் தருவாரு. இப்ப ரொம்ப மாறிட்டாரு!

  இப்படி எப்படி?

  கடலை காண்பிக்கிறதோட சரி!

 • ஒவ்வொரு பண்டிகைக்கும் என் காதலிக்கு ஒரு சேலை வாங்கித் தருவேன்னு தெரியுமா?

  நான் அவளுக்கு மேட்சா ஜாக்கெட் துணி வாங்கித் தருவேன்னு தெரியுமா?

 • டார்லிங் நம்ம கல்யாணம்?

  சுண்டல்காரனுக்கு தரவேண்டிய பாக்கி கடன் தீர்ந்ததும்.

 • நேத்து நீயும் நானும் பயர் படம் பார்த்ததை என் லவ்வர் பார்த்துட்டான்.

  அப்படியா? என்ன சொன்னான்

  என்னை மறந்துடுன்னுட்டான்!

  உங்க இதயத்துல ஒரு உருவம் உக்கார்ந்திருக்கிர மாதிரி எக்ஸ்ரேல தெரியுது.

  ஒரு பொண்ணு என் இதயத்துல இடம் பிடிச்சுட்டானு சொன்னேல, அவளா இருக்கும் டாக்டர்.

 • என் காதலர் ரொம்ப கஞ்சண்டி

  எப்படி சொல்றே?

  அவர் வீட்டிலிருந்தே சுண்டலை ரெடி பண்ணிக் கொண்டு வந்துட்டாரு...!