அலுவலக நகைச்சுவை


 • மேனேஜர் பத்மாசனத்தில் இருக்கார்

  நம்ம மேனேஜர்க்கு யோகாசனம் எல்லாம் தெரியுமா?

  அட, நீ வேற அவர் டைப்பிஸ்ட் பத்மாவோட மடியில் இருக்கார்.

 • சார் உங்க ஆபிசில் பாம்பு வந்தது என்று சொன்னீர்களே அப்புறம் என்னாச்சு?

  அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கியிருச்சி.

  மேனஜர் - நீங்க சீக்கிரமே ஆபிஸ் வந்து நான் பார்த்ததே இல்லை ச்சே...!

  கிளார்க் - சும்மா நிறுத்துங்க சார். இரண்டு வருஷத்துக்கு முந்தி ஒரு செவ்வாய்கிழமை டான்னு ஒன்பது மணிக்கு நான் வந்தேன் நீங்க பார்த்தீங்க.

 • கிளார்க் ராமசாமி நிறைய லஞ்சம் வாங்குவாரோ?

  எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?

  அவர் சட்டையில ஏகப்பட்ட பாக்கெட் இருக்கே...!

 • ஆபிஸ்ல தூங்கிகிட்டே இருப்பீங்களாமே, அப்படியா?

  அபாண்டமான பொய் சார், மதியம் 2 மணிக்கு தூங்கி எழுந்துப்போம். 5 மணிக்கு தூங்கி எழுந்தக்குவோம்.

 • 5 மணிக்கு ஆபிஸ்ல இருந்து வந்துடுவீங்களே 6 மணிக்கு வர்றீங்களே ரொம்ப வேலையா?

  ஊஹும் பியூன் எழுப்ப மறந்துட்டான்.

 • யாரை வேணுமின்னாலும் கேட்டுப்பாருங்க எங்க ஆபீஸிலேயே இது வரைக்கு லஞ்சமா 1 ரூபாய் கூட வாங்காத ஒருத்தன் இருக்கான்ன ர....! அது நான் தான்னு எல்லோரும்மே சொல்வாங்க...!

  நல்ல வேளை இது தெரியாமே என் தங்கையை உனக்குக் கொடுக்கலாம்னு இருந்தனே.

 • என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்

  எப்படிச் சொல்றே

  பல்பு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கே.

 • ஆபிசுக்கு குடிச்சிட்டு போதையில போனது தப்பாப் போச்சு

  தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்களே!

 • எங்க மேனேஜர் அமைதியா அஞ்சு நிமிஷம் கூட சீட்ல உட்காரவே மாட்டார்.

  அவ்வளவு சுறுசுறுப்பா?

  ஊஹும், அவருக்கு மூல வியாதி.

 • ஆபீஸ்க்கு குழந்தைகளை கூட்டிட்டு வந்திருக்கியே எதுக்குய்யா?

  என் குழந்தைகளோட தூங்கிதான் எனக்கு பழக்கம் சார்...!

 • வேலை செய்யும் நேரத்தில் சீட் ஆடி மேனஜரிடம் மாட்டியதும், மேனேஜர் ராமனின் சீட்டை கிழித்து விட்டார்.

  அப்புறம் என்ன ஆச்சி

  வேறு சீட் வாங்கி ஆடினார்கள்.

 • ரிடைர்ட் ஆகும்போது அவருக்கு பணம் முடிப்புடன் அருகம்புல்லும் தருகிறார்கேள, ஏன்?

  கம்பெனிக்கு மாடாய் உழைத்ததால்.

 • கிளார்க் குமரசாமி நிறைய லஞ்சம் வாங்குவாரோ?

  எப்படி சார் கண்டுபீடிச்சீங்க?

  அவர் சட்டையில் ஏகப்பட்ட பாக்கெட் இருக்கே...!

 • எங்க மேனஜர் வரும் போது, மரம் மாதிரி நின்னுக்கிட்ருந்தது தப் பா போச்சு

  ஏன்?

  கூப்பிட்டு அறு, அறுன்னு அறுத்து தள்ளிட்டார்.

 • எங்க ஆபிஸ்ல வேலை செய்ற எல்லோரும் கை நீட்டி லஞ்சம் வாங்க மாட்டாங்க...!

  அப்படியா?

  ஆமா, நீங்க தான் கை நீட்டி லஞ்சம் கொடுக்கனும்.

 • உங்க பிரா கம்பெனியோட கிளைகள் பல ஊர்ல இருக்காமே எந்தெந்த ஊர்ல?

  வியாசர்பாடி...! வாணியம்பாடி! காட்பாடி! தரங்கம்பாடி! குறிஞ்சிப்பாடி!