நகைச்சுவை - 9


 • சோப்பு கடைக்காரன் பாண்ணை கட்டிகிட்டது தப்பா போச்சா ஏன்?

  வெட்டு ஒண்ணு துண்டு இரண்டா பேசுறா.

 • யாருமே அழமட்டேங்கிறாங்க

  அதுக்காக சாவு வீட்டுல டி.வி. நாடகம் போட்டு விடறதா?

  தங்கத்துக்கு மட்டும் தான் கடன் தருவோம்.

  சரிங்க நாளைக்கு என் மகள் தங்கத்தை கூட்டிட்டு வர்றேன்.

 • பக்கத்து வீட்ல போய் ரேடியோ கேட்டதுக்கு என்னை ஒரு மாதி ரி பார்த்தாங்க?

  ஏன்?

  ரேடியோ நிகழ்ச்சியைக் கேட்கலை, ரேடியோவே வேணும்னு கேட்டேன்.

 • என் பூட்டை உடைத்து 5 லட்சம் திருடிட்டு போயிட்டாங்க.

  பூட்டுக்குள்ளே எப்படியா 5 லட்சம் வச்சிருந்தே?

 • இவள் பெயர் மங்களம். குழந்தை இல்லை.

  மங்களம் உண்டாகட்டும்.

 • என்னது உங்க கண்ணுக்கு சளி பிடிச்சிச்சா...?

  ஆமாம், கூலிங்க கிளாஸ் போட்டிருந்தேன்.

 • எதுக்கு கலவரப் பகுதியை சுத்தி கயிற்றால் கட்டி வச்சிருக்காங்க ?

  கலவரப் பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருக்கு துன்னு சிம்பாலிக்கா சொல்றாங்க...!

 • பாக்கெட்டில் ரூ. 100 வைத்திருந்தேன் இப்பது 10 ரூபாய் தான் உள்ளது.

  நீங்க தான் பையனிடம் 100க்கு 90 எடுக்க சொன்னீங்க.

 • என் வாழ்க்கையே இருண்டு போச்சு கமலா

  ஏங்க, என்னாச்சு?

  எனக்கு நிரந்தரமா நைட்டூட்டி போட்டுட்டாங்க

 • 5ல் 7 போகுமா?

  பக்கத்தில் கடன் வாங்கினால் போகும்.

 • அவார்டு கொடுத்திருக்காங்க ஒரு ஊருக்கு

  என்ன ஊரு....?

  விருதுநகர்

 • குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்னு சொல்லு?

  தெரியைலேய?

  குளிக்கும் போதே துவட்ட முடியாதே.

 • கோழி ஏன் முட்டை போடுது?

  அதுக்கு 1,2,3, தெரியாது அதான் முட்டை போடுது,