சினிமா நகைச்சுவை - 2


 • ஹீரோ சொந்த குரல்ல பாடியே தீருவேன்னு அடம் பிடிக்கிறாரு சார்!

  சரி ஆம்பத்திலேயே ஒரு மந்திரவாதி வந்து அவரை கழுதையாமத்திடறது மாதிரி எடுத்திடலாம்.

 • அந்த கவர்ச்சி நடிகை கொடுத்திட்டுப் போன பத்திரிக்கையை ஏன் ஆச்சர்யமா பார்க்குறீங்க.

  தொப்புள்ல தோடு போடுற தொப்புள் அணி விழா அழைப்பிதழ் கொடுத்திட்டு போறாங்க.


  சினிமாங்கறது என் ரத்தத்துல ஊறினது சார்

  சரி... ஏன் ஒரு மாதிரியான படமாவே எடுக்கிறீங்க.

  என் ரத்தம் ஏ குரூப் ஆச்சே...!

 • திருடன்னுக்கு பிடித்த ராகம் எது?

  சுருட்டி.

 • அடிக்கடி வாந்தி எடுக்கிற நோயாளியை பத்தி ஒரு படம் எடுக்கப்போறேன்.

  என்ன பேரு?

  கக்க...! கக்க...!

 • இப்ப பாத்ரூம் போனாரே அவர் எப்படி வருவார்?

  அவர் ரஜினி ரசிகர் எப்ப வருவார் எப்படி வருவார்னு அவருக்கே தெரியாது.

  என்னங்க இது பாத்ரூம் கூரையை பிரிட்சிட்டு வர்றாரு?

  அவர் ரஜினி ரசிகர்ன்னு சொன்னேனே, அவர் வழி தனி வழியாகத்த ரன் இருக்கும்.

 • என் மனைவி டி.வி சீரியலை விரும்புகிறதுக்கும் ஒரு அளவில்லாம போயிடுச்சு

  ஏன்?

  எங்க வீட்டு பெயரை மெட்டிஒலி இல்லம்னு மாத்திடசொல்றா

 • பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்

  எப்படி?

  ரொம்ப நாளா ஒரு திருடன் கரெக்டா நாங்க டி.வி. சீரியல் பார்க்கும் போது வந்து வந்து திருடிக்கிட்டு இருந்தான். ஒரு நாள் கரண்ட் இல்லாத சமயம் அவனை பிடிச்சிட்டோம்.

 • இந்தப் படம் வெளியிட்டிருக்கிற தியேட்டரில் மட்டும் நாற்காலியின் உள்பகுதியை வெட்டி இருக்கீங்களே ஏன்?

  அப்பத்தானே மக்கள் மத்தியில் சீட் நுனியில் உட்கார்ந்து படம் பார்த்தாகள்னு சொல்லலாம்.

 • அதோ போறாரே அர் படையப்பா படத்தை தொடர்ந்து 100 தடவையா பார்த்துக்கிட்டிருக்கார்.

  அவ்வளவு தீவிர ரஜினி ரசிகரா...?

  ம்ஹும் அவரு தியேட்டர் ஆப்ரேட்டர்...!

 • ஆத்தா கோழி வளர்த்தா, ஆடு வளர்த்தா, மாடு வளர்த்தா ஆனா நாய் வளர்க்கவில்லை ஏன் தெரியுமா?

  அதை அடிச்சி தின்ன முடியாது.

 • எங்க படத்துல இடைவேளைக்கு முன்ன 3 பாட்டு, இடைவேளைக்கு அப்புறம் 4 பாட்டு.

  அப்ப எட்டு முறை இடைவேளைன்னு சொல்லுங்க.

 • கழுக்கும், மனிதனுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்னன்னு சொல் லு பார்க்கலாம்?

  இரண்டுமே ரஜினிகார்ந்த நடிச்சது.

 • எங்க தியேட்டர்ல படம் ஓடிட்டிருக்கும் போது கத்தியை காட்டி மிரட்டி கல்லாவுல இருந்த பணத்தை யெல்லாம் ஒரு ஆம்பிள்ளையும் பொம்பளையும் திருடிட்டு போயிடடாங்க. இன்பெக்டர் சார்

  அப்பா என்ன படம் ஓடுச்சு?

  திருடா திருடி

 • துப்பாக்கி வைத்துள்ள நடிகை யார்?

  சுகன்யா.

 • சிம்ரனுக்கு பிடித்த தேர்தல் எது?

  இடைத்தேர்தல்

 • கலைப்புலி தாணு காக்காவ வெச்சி படம் எடுத்தால் என்ன பெய ர் வைப்பார்?

  காக்கா... காக்கா

 • காமெராமேன் தன் அஸிஸ்டெண்டை ஏன் வேலையை விட்டு நிறுத்திட்டார்?

  ஷாட் நல்லா வந்திருக்கானு காமராவை திறந்து பார்த்தானாம்.

 • என்னங்க உங்க ரசிகர்கள் எல்லாம் நிறைய களிம்பு மருந்து அனுப்பியிருக்காங்களே ஏன்?

  போன படத்துல என் பின்னாடி பெரிய படையே இருக்குன்னு டயலாக் பேசினேன் அதை தப்பா புரிஞ்சு கிட்டாங்க போலிருக்கு.