நகைச்சுவை - 3


 • நேற்று அவனை ஒன்றுக்குமூ லாயக்கில்லை என்று கூறிய பிறகு எல்லோரும் மூக்கில் விரல் வைக்கும்படி ஒரு காரியம் செய்து விட்டான்.

  அப்படி என்ன காரியம் செய்தான்?

  கால்வாயை குச்சியால் கலக்கி விட்டான்.

  ஒவ்வொரு விரல்லியும் ஒரு சிகெரட் வெச்சு பிடிக்கிறாரே?

  நிறைய சிகெரட் பிடிப்பாருன்னு சொன்னனே அது இவர்தான்.

 • மெக்கானிக்கு பிடித்த சோப் எது?

  வீல் சோப்.

 • நாய் கடிக்கு முதலில் என்ன செய்யனும்?

  நாய்கிட்டே போய் காலை கொடுக்கனும்.

 • வயதான பாட்டி வீட்டிற்கு வெளியே எதையோ தேடிக்கொண்டிந்தார். அங்கு வந்தவர் என்ன தேடிக் கொண்டிருக்கீறீர்கள் என்றார்? வீட்டிற்கு உள்ளே போட்ட நைகைய தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார் பாட்டி?

  ஏன் வெளியே தேடிக் கொண்டிருக்கீறீர்கள் என்றர் அவர் ? உள்ளே மின்சாரம் கட் அதான் வெளியே தேடுகிறேன் என்றாராம்.

 • உள்ளாடை அணியும் ஊர் எது?

  வாணியம் பாடி

 • சாப்பிடக்கூடிய ஆணி எது?

  பிரியாணி

 • ஒரே வீட்ல பத்து தடவைக்கு மேலே திருடியிருக்கியே ஏன்?

  நான் அவங்க பேமிலி திருடன் எஜமான்.

 • உங்க வீட்டு கதவுல ராமசாமி இன் அவுட்னு போர்டு வெச்சிருக்கீங்கேள, அவர் ரொம்ப பிஸியா?

  ம்ஹும் கடன்காரங்களுக்கு உதவியா இதை வெச்சிருக்கார்.

 • உங்க வீடு எங்கே இருக்கு ஸார்?

  அடமான பேங்க்ல இருக்கு ஸார்?

 • அந்த கடையில் குடை வாங்காதீங்க அது ராசில்லாத கடை

  வாங்கினா என்ன ஆகும்?

  மழையே வராது.

 • எதுக்கு வேலைக்காரியை எட்டு மணிக்கு வரச் சொல்ற?

  ஏழு மணிக்கு தலைப்பு செய்திகள் சொல்லுவா எட்டு மணிக்கு பக்கத்து வீட்டுச் செய்தியெல்லாம் விரிவா சொல்லுவா.

 • நான் நீச்சல் கத்துக்கேறன்

  எங்கே...?

  தண்ணியிலதான்...!

 • தாத்தா இனிமே கம்பியூட்டர் படிச்சாத்தான் வேலை கிடைக்கும்.

  அப்படி நீ படிச்சா கிடைக்காதா?

 • நான் ஹார்லிக்சை அப்படியே சாப்பிடுவேன்?

  முட்டாள் பாட்டில் எப்படி ஜீரணமாகும்.