பத்திரிகையாளர் நகைச்சுவை


 • அந்த எழுத்தாளர்க்குப் பாராட்டு விழா நடத்தறாங்களே, அவங் க எல்லாம் யாரு?

  பழைய பேப்பர் வியாபாரிங்க.

  என்னையா இராவணன் மனைவியை ராமன் தூக்கிட்டு போறதா எழுதியிருக்க?

  புதுமையா ஏதாவது எழுதுன்னு நீங்க தானே சொன்னீங்க...!

 • ஒரு செய்தித் தாளுக்கு வந்த விளம்பரம்

  நீங்கள் தற்குறியா எழுதப்படிக்கத் தெரிந்தவரா?

  அப்படி இருந்தால் எங்களுக்கு எழுதுங்கள்.

  நாங்கள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்.

  உங்க கதையில உப்பு சப்பே இல்ல...!

  எப்படி சொல்றீங்க?

  நீங்க கதை எழுதியிருந்த பேப்பரை சாப்பிட்டுப் பார்த்தேன்...!

 • நீங்க எழுதின ஜோக் பத்திரிக்கையில பிரசுரம் ஆயிடுச்சே அப்புற ம் ஏன் கவலையா இருக்கீங்க சார்?

  ஏதோ தொலைந்து போகட்டும்னு ஒரு ஜோக் பிரசுரம் செய்துள்ளோம். தொடர்ந்து கதை கதையா ஜோக் எழுதி அனுப்பி கழுத்தறுக்க வேண்டாம்னு எடிட்டர் கிட்ட இருந்து கடிதம் வந்திருக்கே.

 • பணம் சம்பாதிப்பது எப்படின்னு புக் எழுதினீங்கேள

  அதை ஏன் வெளியிடலை?

  அதை வெளியிடறத்துக்கு காசுக்குதான் அலையேறன்.

 • ஒரு ஜோக் எழுத்தாளரை கல்யாணம் கட்டிகிட்டு போலி வாழ்க்கை வாழ்ந்துகிட்டிருக்கேன்.

  அதென்ன போலி வாழ்க்கை?

  அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனாம சிரிச்சிக்கிட்டிருக்கேன்!