உங்க கடை இட்லி பஞ்ச மாதிரி இருக்கே எப்படி? பருத்திக்கொட்டையை ஆட்டி மாவு சுடுறோம். | ||
ஒரு சர்தாஜி ஓர் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினார் ஒரு நாள் மாலை அவர் கண்ட காட்சியில் அவருக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது. நேரே ரிஷப்ஷன் கிளார்க்கிடம் சென்று புகர் செய்தார். இது கௌரவமான ஓட்டல்தானா? ஆம். இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு? நான் 5ம் மாடியில் இருந்தேன். அங்கிருந்து பார்த்த போது வராந்தாவில் நிர்வாணமான ஓர் ஆண், நிர்வாணமான ஒரு பெண்ணைத் துரத்திக் கொண்டிருந்தான். அவன் அவளைப் பிடித்துவிட்டானா? என்று கேட்டார் கிளார்க். சர்தாஜி இல்லை என்றார். அதனால் தான் இது கௌரவமான ஓட்ட என்கிறேன்.
| ||
அந்த ஓட்டல்ல என்ன தகராறு? சாப்பிட வந்த ஒருத்தர், தண்ணிபோதாம பக்கத்து டேபிள்ல இருந்தவர் தண்ணீரை குடிச்சிட்டாரம். | ||
ஓட்டலில் தோசை நன்றாக இல்லை என்று கத்தினார் ஒருவர். அவரை சமாதானப்படுத்த முயன்றார் பரிமாறுபவர் அதெல்லாம் முடியாது மேனேஜரை உடனே இங்கே கூப்பிடு என்று பாய்ந்தார் கஸ்டமர். சார் மேனேஜரை கூப்பிடுகிறேன். ஆனால் அவரை இந்த தோசையை சாப்பிடும்படி கட்டபாயப்படுத்தாதிர்கள். | ||
உங்க ஓட்டல் மெதுவடை சூப்பரா இருக்கு எப்படி சுட்டீங்க? ஒரு வாரத்துக்கு முன்னாடி சுட்டதால, மறந்து போயிடுச்சு. | ||
அவர் ஏன் ஓட்டலில் இட்லியை வாங்கி வீட்டிற்கு கொண்டு போய் சாப்பிடுகிறார்? ஓட்டலில் சாப்பிட்டா அல்சர் வரும்மாம். | ||
என்ன சர்வர் காபியில இரண்டு ஈ மிதக்குது? இன்னிக்கு பரவாயில்லை சார் நேத்து வந்திருந்தீங்கன்னா நாலு ஈ மிதந்திருக்கும். | ||
நம்ம ஓட்டல் சரக்கு மாஸ்டருக்கு தொழில் பக்தி அதிகம்...! எப்படி? நெற்றியில் சந்தனத்துக்கு பதிலா சாம்பாரை தடவியிருக்காரே! | ||
இந்த ஓட்டல்ல நிறைய சாம்பார் ஊத்து வாங்க...! அதுக்காக இரண்டு இட்லிக்கு ஒரு பக்கெட் சாம்பார் ஊத்தணும ர? | ||