கவிதை - வெளியே வா

தூக்கத்தை தூக்கி
தூர வைத்தேன்
விடியல் தெரிந்தது!

* ஏக்கத்தை வழித்து
துடைத்து எறிந்தேன்
உற்சாகம் பிறந்தது!

* குறை கூறுவதை
புறம் தள்ளினேன்
உதவிகள் கிட்டியது!

* திட்டித் தீர்ப்பதை
விட்டொழித்தேன்
பாராட்டுக்கள் குவிந்தது

* வட்டத்தை விட்டு
வெளியே வந்தேன்
வாழ்க்கை தெரிந்தது!