அரசியல் நகைச்சுவை - 1


 • தலைவர் பேச ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டார்.

  அதுக்காக ஒரு வாரமா, யாருய்யா கூட்டத்தை கூட்டிகிட்டு வர்றது.

 • கருணாநிதிக்கு பிடித்த காபி?

  சன் ரைஸ்

 • கட்சியில் போதிய பணம் இல்லாம இருக்கலாம். அதுக்காக இப்ப டியா?

  என்னாச்சி?

  தலைவர் பேச்சு களைப்புல, சோடா கேட்டா, சோடாவை அவர் கண்ல காமிச்சிட்டு, காமிச்சிட்டு ஒளிச்சி வெச்சிடுறாங்க.

 • நடை பயணத்தை ஒரே நாளில் ரத்து செய்து விட்டீர்கேள, ஏன் த லைவரே?

  ஒத்தையிலே நடந்து போக பயமா இருந்துச்சு அதான்.

 • எங்க பொண்ணு முதலிரவு அறைக்குள் சோடா கொண்டு போகுது?

  மாப்பிள்ளை அரசியல்வாதியாச்சே...!

 • தலைவரே புது வீடு கட்டி பால்தான் காய்ச்சனும் சாராயம் காய்ச்ச கூடாது.

  பழைய ஞாபகத்துல பண்ணிட்டேன்.

 • தலைவர் முன்னாடி ரவுடியா இருந்திருக்கலாம். அதுக்காக தொண்டர்கள் இப்படியா பண்ணறது?

  என்ன பண்ணாங்க?

  அவருக்கு சைக்கிள் செயின் மாலை, சோடா பாட்டில் மாலை போடுறாங்க.

 • இந்த மந்திரி வெடி எப்படி வெடிக்கும்?

  பத்த வச்ச உடனே கால்ல வந்து பொத்னு விழும்.

 • அவர் அரசியல்வாதின்னு எப்படி கண்டு பிடிச்சே?

  கோயில்ல வந்து சாமியை பார்த்து, தலைவா என்னை காப்பாத்துன்னு காலடியிலே விழுறாரே.

  மீட்டிங்லே பேச வந்த தலைவர் ஏன் டென்ஷனா உட்காந்திருக்கார்?

  போஸ்டர்ல அஞ்சா நெஞ்சன்னு பிரிண்ட் பண்றதுக்குப் பதிலா, கஞ்ச நெஞ்சன்னு பிரிண்ட் பண்ணிட்டாங்களாம்.

 • தலைவர் அடிக்கடி சோப்பு போட்டு கையை கழுவுறாரே, ஏன்?

  கறை படியாத கை என்று மக்களுக்கு காட்டனுமே.

 • உங்க பையன் அரசியலுக்கு தான் போவான்னு எப்படி ஸார் சொல்றீங்க?

  கிளாஸ்ல அடிக்கடி என்னை கண்டிச்சு வெளி நடப்பு செஞ்சுடுறான்.

 • அதிக எடை உள்ள அதிபர் யார்?

  கிளிண்டன்

 • முன்னாள் மந்திரிக்கு இவ்வளவு பாதுகாப்பா?

  பாதுகாப்பு அவருக்கு இல்லை. அவர்கிட்டே இருந்து பொதுமக்களை காப்பாத்துறக்கு.

 • பஞ்சாயத்து கூட்டத்துக்கு தலைவர் ஏன் இஞ்ச் டேப்போட வர்றாரு?

  அளந்து பேசத்தான்.

 • தலைவேர, நான் உங்ககிட்ட உதவியாளரா சேர்ந்த பிறகு, நீங்க ஒரு வேலையும் சொல்லலையே?

  நான் இப்ப எந்த கட்சியில இருக்கேன்னு கண்டுபிடி பார்க்கலாம்?

 • தலைவர் திடீர்னு ஆஸ்பிடல் கட்டுறாரே என்ன விஷயம்?

  அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்களாம். தொழிலை ஆரம்பிச்சுடலாம்னு பார்க்கிறாரு.

 • தலைவரின் அறுபதாம் கல்யாணத்தில் சிக்கல்.

  என்னவாம்?

  எந்த மனைவியோட கொண்டாடுவதுன்னுதான்...!

 • எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?

  எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.

 • மழை வர்ற சமயமெல்லாம் ஏன் தலைவர் ஓடிப் போய் ஸ்கூல் பக்கம் நின்னுக்கிறாரு?

  தலைவர் மழைக்கு கூட பள்ளிபக்கம் ஒதுங்கியது இல்லைனு எதிர்கட்சி தலைவர் பேசுறதை தடுத்து நிறுத்தத்தான்.

 • தலைவர் ஒரு சோடா பைத்தியம்னு எப்படி சொல்லற?

  அன்பார்ந்தனு பேசினதும் சோடா கொடுங்கப்பாங்கிறாரு.

 • நேத்து நடந்த கல்யாணத்துல தலைவர் மானத்தை வாங்கிட்டார்

  என்னாச்சி?

  திருமணத்தை நடத்தி வைத்தநான், சாந்தி முகூர்த்தத்தையும் நடத்திவைத்து மணமக்களை சந்தோஷப் படுத்துவேன்னு சொல்லிட்டார்.

 • ஊழல் பெருச்சாளிகளை பிடிக்க சொல்லி மேலிட உத்தரவு, என்ன பண்ணலாம்?

  நாலு பூனைகளை வாங்கிட்டு போகலாம் சார்.

 • தலைவரே...! மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க வாங்க ஓடிடலாம்...!

  இருய்யா...! எனக்கு ஒரு செருப்பு தான் கிடைச்சு இருக்கு...!

 • நம்ம தலைவர் சுத்த அல்பம்

  ஏங்க?

  அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தா என் மனைவிக்கு ஒரு நர்ஸ் பட்டமாவது கொடுங்க எப்படியாவது என் தம்பிக்கு ஒரு கம்பௌன்டர் பட்டம் கொடுங்கன்னு நச்சரிக்கிறாராம்.

 • இது எந்த ஊரு? இதுக்கு முன்னாடி எப்பவோ இங்க வந்த மாதிரி இருக்கே?

  கொஞ்சம் மெதுவா பேசுங்க. இதுதான் நீங்க எம்.எல்.ஏ வாக ஜெயிச்ச தொகுதி.

 • தலைவர் மைக் செட்காரங்கிட்ட கூட லஞ்சம் வாங்கிட்டார்...! எப்படி?

  மேடையில் பேசும்போது அரைமணிக்கு ஒரு தடவை சிறந்த ஒளி, ஒலி அமைப்புக்கு மாலா சவுண்ட் சர்வீஸ்னு சொல்றாரு...