என்னதான் பெரிய பேச்சாளராயிருந்தாலும் .....

என்னதான் பெரிய பேச்சாளராயிருந்தாலும் அவரால மேகக்கூட்டத்திலோ, நட்சத்திரக் கூட்டத்திலோ எல்லாம் பேச முடியாது. எந்நேரமும் செல்லில் பேசிக் கொண்டே இருப்போர் சங்கம்

--------------------------------------------------------------------------------

கொஸ்டீன் பேப்பரைப் பார்த்து நாம அழுதா அது தரித்திரம்; நம்ம ஆன்ஸர் பேப்பரைப் பார்த்து திருத்தறவங்க அழுதா அது சரித்திரம்!

சுமாரா படித்து சரித்திரம் படைப்போர் சங்கம்

--------------------------------------------------------------------------------

அந்த கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிங்க இருக்குன்னு எப்படிச் சொல்றே..? ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த தலைவரை, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி ஒரு கோஷ்டி போராடுதே...

--------------------------------------------------------------------------------

நீ பூக்கள் மீது உறங்கினால் அது ஃபர்ஸ்ட் நைட். உன் மீது பூக்கள் உறங்கினால் அது லாஸ்ட் நைட். இதான் லைஃப்போட ட்ரூவாலஜி!

இந்த உலகத்தில் காதலிக்கிறவனை ஒரு பர்சன்ட் பொண்ணுங்கதான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. மத்தவங்க எல்லாரும் பசங்க இமெயில் ஐடிக்கு பாஸ்வேர்டா மாறிடுறாங்க.

--------------------------------------------------------------------------------

அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு நீக்கிட்டாரு..?’’‘‘கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..!

--------------------------------------------------------------------------------

எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்குச் சேர்ந்தவர், என்ன செய்யறதுன்னே தெரியாம திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருந்தார்...’’ அப்புறம்..?’’ ‘‘நான்தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்..!

0 comments:

Post a Comment