ஏன்னயா..... இப்ப லேட்ட்ஸ்டா நாம வாங்கிப்போட்ட 
ஆயுத பிசினஸ்ல என்ன கமிஶன் வரும் ? 
விசாரனை கமிஶ்ன்தான் வரும் ! 
--------------------------------------------------------------------------------------
நம்ம மந்திரி வங்கிக்கு போறதுக்கு பயப்படுறாரு ! 
ஏன் ? 
கௌண்டரிலே பணம் வாங்கும்போது யாராவது வீடியோ... 
எடுத்துடுவாங்களோன்னுதான் ! \
--------------------------------------------------------------------------------------
தலைவருக்கு தேர்தல் பற்றி விழிப்புணர்ச்சியே இல்லைன்னு 
எப்படி சொல்லுறீங்க ? 
ஒட்டுக்களை பிரிக்கணும்னு சொன்னா... தனக்கு கூரையேறிய அனுபவம் 
நிறைய உண்டுங்கிறாரே !... 
--------------------------------------------------------------------------------------
தலைவர் சரியான் கோழை !... 
என்னவாம் ? 
புலி, யாகம், ரத்தம்... இந்தமாதிரி செய்திக்கு பிறகு வீட்டு சமையல்ல புளி 
உபயோகப்படுத்துறதைக்கூட விட்டுட்டாரு..... 
--------------------------------------------------------------------------------------
தலைவருக்கு எல்லாமே பொருத்தமாய் அமைந்திடுச்சா..... எப்படி ? 
அவருக்கு ஒரு சின்ன வீடாம் !.... தேர்தலில் அவர் சின்னமும் வீடாம் ! 
--------------------------------------------------------------------------------------
தலைவருக்கு ஜீரன சக்தி அதிகம்னு சொல்லுறியே...... எப்படி ? 
கோடி கோடியா முழுங்கிறாரே.... ! 