இப்படியும் படத்தலைப்புகள் வரலாம்

சென்னையில் கல்லூரி இளசுகளிடையே ஒரு எஸ்.எம்.எஸ். ரொம்ப பிரபலமாகி வருகிறது சமீப காலமாக...! அது கோலிவுட் நாயகர்களின் பட டைட்டில்களைப் பற்றிய நக்கலும் நையாண்டியும்தான் என்பது ஹைலைட்.

சுறாவை அடுத்து விஜய் நடிக்க இருக்கும் படங்களின் தலைப்பு நெத்திலி, கருவாடு, வஞ்சிரம், திமிக்கலம் என்பதாக இருக்குமாம்.

மங்காத்தாவில் நடித்து வரும் அஜித்தின் அடுத்தடுத்த படத் தலைப்புகள்... மாரியாத்தா, செல்லாத்தா என்பதாக இருக்குமாம்.

தனுஷ் படிக்காதவனைத் தொடர்ந்து எழுதாததவன், விளங்காதவன் உள்ளிட்ட படங்களிலும்,

ஜீவா எஸ்.எம்.எஸ் படத்தை தொடர்ந்து எம்.எம்.எஸ், மிஸ்ட்கால், டயல்ட் கால் உள்ளிட்ட படங்களிலும்,

விஷால் சத்யம் படத்தை தொடர்ந்து இன்போசிஸ், விப்ரோ பெயரை உ‌டைய படங்களிலும்,

சிம்பு சுவரைத்தாண்டி வருவாயா, துண்டைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களிலும்,

மாதவன் குரு என் ஆளு, கவிதா உன் ஆளு, ரஞ்சிதா சுவாமிஜி ஆளு உள்ளிட்ட படங்களிலும் நடிப்பதாக சொல்லி கிண்டலடிக்கிறது அந்த இளசுகளின் எஸ்.எம்.எஸ்.!

‌கோடம்பாக்கத்தின் டைட்டில் பஞ்சம் இப்படியும் தலைப்புகளை சூட்ட வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார் வேதனையுடன் ஒரு ரிட்டயர்டு கோலிவுட் டைரக்டர்!

4 comments:

THOPPITHOPPI said...

மாதவன் குரு என் ஆளு, கவிதா உன் ஆளு, ரஞ்சிதா சுவாமிஜி ஆளு உள்ளிட்ட படங்களிலும் நடிப்பதாக சொல்லி கிண்டலடிக்கிறது அந்த இளசுகளின் எஸ்.எம்.எஸ்.!

//////////////////

ஹிஹிஹி

super

Philosophy Prabhakaran said...

TMT (Tamil Movie Tracker) எனும் தளத்தில் இதே செய்தியை சிறிது நேரத்திற்கு முன்பு படித்தேன்.... நீங்கள் தான் அதை வெளியிட்டீர்களா... வேறு யாராவது உங்கள் படைப்புகளை திருடாமல் பார்த்துக்கொள்ளவும்...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

Bharathshankar said...

அட போங்கப்பா சிம்புவ பத்தி பேசி மூட் அவுட் பன்னீட்டீங்க....... tamil cinema jocker simbu......

Unknown said...

1xbet - Best Bet in 1xBet - Download or Install for Android
1xbet is the best betting app in the febcasino.com world created for 1xbet app esports. It is a one https://jancasino.com/review/merit-casino/ of the safest and most trusted names among players. It offers a deccasino user friendly interface

Post a Comment