அரசியல் நகைச்சுவை - 2

'நம்ம தலைவருக்கு விளம்பரமே பிடிக்காது !'

'அப்படியா ?'

'ஆமா. உடனே சேனலை மாத்திடுவார் !'

-----------------------------------------------------------------------------------------------

ஒன்று மட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்...'

'கிழிஞ்சது போ, தலைவர் இப்போதைக்கு பேச்சை முடிக்கிற
மாதிரி தெரியலை !'

-----------------------------------------------------------------------------------------------

'பாஸ்போர்ட் வந்ததும் தலைவர் ஏன் இவ்ளோ எமோஶனல் ஆகிட்டார் ?'

'வாழக்கை முதன்முதலா ’பாஸ்’ங்கிற வார்த்தையை இப்பதான் பார்க்கிறாராம் !'

-----------------------------------------------------------------------------------------------

வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட போயிருந்தீங்களே,
எப்படி இருந்தது ?'

'ஃபுல் தண்ணி நிக்கவே முடியல

-----------------------------------------------------------------------------------------------

'நெஞ்சில் ஈட்டி பாயும் அளவிற்கு நீங்கள் எதிர்த்து
போர் புரிந்தீர்களா மன்னா ?'

'ஊஹூம்... எவ்வள்வு தூரத்தில் துரத்தி வர்றான்னு திரும்பிப் பார்த்தபோது. சண்டாளப் பாவி அம்பை எய்திட்டான்யா !'