தொடர்ந்து தாதா கேரக்டர்ல நடிச்சது 
தப்பாப்போச்சா, ஏன் சார் ?' 
'போலீஸ்காரங்க என்கவுன்ட்டர்ல 
என்னைப் போடுத் தள்ளிடுவாங்களோன்னு 
பயமா இருக்கு !
--------------------------------------------------------------------------------------------------
அந்த டைரக்டர் படத்தோட கதையை ரொம்ப ரகசியமா 
வெச்சிருப்பாராமே ?' 
'ஆமாம் ! படத்துலகூட காட்டமாட்டார் !' 
--------------------------------------------------------------------------------------------------
அந்த நடிகை தமிழ் சினிமா 
ரசிகர்களை ஒரு டாக்டராகவோ அல்லது 
வக்கீலாகவோ நெனைச்சுட்டேதான் 
நடிப்பாங்களாம்...!' 
'ஆமாம் ! டாக்டர்கிட்டேயும். 
வக்கீல்கிட்டேயும் எதையும் 
மூடி மறைக்கக் கூடாதே !' 
--------------------------------------------------------------------------------------------------
எதுக்கு நீங்களே ஒரு ஆளை செட் பண்ணி ’உங்க படத்தோட 
கதை என்னோடது’ன்னு கேஸ் போட வெச்சிருக்கீங்க ?' 
'அப்பதானே படத்துல கதை இருக்குன்னு ஜனங்க நம்புவாங்க !'
--------------------------------------------------------------------------------------------------
உங்க பாட்டில் ரெட்டை அர்த்தம் இருக்கே?' 
'தேவலாமே... எவ்வள்வோ பேர் அர்த்தமே இல்லா பாட்டு எழுதலியா?' 