டாக்டர் நகைச்சுவை

என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு
நேத்துதான் தெரிஞ்சது !

'தெரிஞ்சதும் என்ன பண்ணினே ?'

'கலாவை வேலையைவிட்டு நிறுத்திட்டேன் !'

-----------------------------------------------------------------------------------------------

அந்தப் பல் டாக்டர் வீட்ல
ஏன் ரெய்டு நடக்குது ?'

'வருமானத்துக்கு அதிகமா
சொத்தை சேர்த்துட்டாராம் !'

-----------------------------------------------------------------------------------------------

நம்ம டாக்டர் ரொம்பவும்
மனிதாபிமானம் உள்ளவர் !'

'எப்படி ?'

'ஆபரேசன் முடிஞ்சதும்
பேசன்ட்டோட ஆத்மா
சாந்தியடையணுங்கறதுக்கு
பிரார்த்தனை பண்றாரே !'

-----------------------------------------------------------------------------------------------

என்னடா...இந்தத் தியேட்டர்ல ஒவ்வொரு
சோ முடிஞ்சதும் கூட்டறாங்க ?'

'படம் ரொம்ப குப்பையா இருக்காம் !'

-----------------------------------------------------------------------------------------------

டாக்டர்தான் ஆபரேசனுக்கு
எழுதிக் குடுத்துட்டாரே, அப்புறம்
ஏன் பயப்படறீங்க ?'

'எழுதின கையோட பேனா
நிப்பை மேஜையில குத்தி
உடைச்சுட்டாரே !'