ஆப்ரேசன் தியேட்டலேர்ந்து பேசன்ட் ஏன் பயந்து ஒட்றாரு?..' 
'ஆப்ரேசன் தியேட்டர் உள்ளே ’கடமையை செய் பலனை 
எதிர் பார்க்காதே’ அப்படின்னு எழுதி வச்சிருக்கராம்!' 
---------------------------------------------------------------------------------------------------
உனக்கு குளிர் ஜூரமா ! ஜூரத்தை மட்டும்தான் என்னால் நிறுத்த முடியும் !' 
'ஏன் டாக்டர் ?' 
'இது குளிர்காலமாச்சே !' 
---------------------------------------------------------------------------------------------------
நீ விரும்புற பெண்ணே உனக்கு மனைவியா அமைவா தம்பி' 
'கமலா, கிருத்திகா, சரிகா, காயத்ரி..இவங்கள்ல யாருன்னு குறிப்பா சொல்ல முடியுமா ஜோசியரே...?' 
---------------------------------------------------------------------------------------------------
டார்லிங்! நமக்கு சீக்கிரம் கல்யானம் 
நடக்கனும்னு கோயில்ல நேத்து பிரார்த்தனை 
பண்ணிகிட்டேன் பலிக்குமா?' 
'அம்பது சதவிகிதம் பலிச்சிடுச்சி! வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க
---------------------------------------------------------------------------------------------------
உங்க புணைப்பெயர் கீதாப்பிரியாங்கிறிங்களே 
கீதா ங்கிறது உங்க மணைவி பெயரா?' 
'உங்க ந்ர்ஸ் பெயர்தான் டாக்டர்!' 