அரசியல் நகைச்சுவை

நம்ம தலைவருக்கு மூணு மனைவி
இருக்கிறதா எதிர்க்கட்சித் தலைவர்
தரக்குறைவா பேசிட்டாரு !'

'அது தரக் குறைவு இல்லைய்யா, தாரக்
குறைவு. நம்ம தலைவருக்கு மொத்தம்
நாலு மனைவி !'

------------------------------------------------------------------------------------------------------------------

என்னது டென்னிஸ்
போட்டியைத் துவக்கி வைக்க
வந்த தலைவர் ஆட்டமே நடக்காம
பண்ணிட்டாரா ?'

'ஆமாய்யா திறப்பு விழா
ஞாபகத்துல, கொண்டுவந்த
கத்திரியால ’நெட்’டை
வெட்டிட்டாரு !

------------------------------------------------------------------------------------------------------------------

தலைவருக்கு இன்ஃபீரியாரிட்டி

காம்ப்ளெக்ஸ் அதிகமா ?

சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் அதிகமா ?'எனக்குத் தெரிஞ்சு, அவருக்கு

சாப்பிங் காம்ப்ளெக்ஸ்தான் அதிகம் !'

------------------------------------------------------------------------------------------------------------------

ஜெயில்ல நடந்த விழாவுல கலந்துக்கப்போன தலைவர் மானத்தை வாங்கிட்டாராமே ?'

'ஆமாம், பழக்கதோசத்தல தரையில உட்கார்ந்துட்டார் !'

------------------------------------------------------------------------------------------------------------------

தலைவரே உங்க சொத்து விவரத்தை
ஏன் வெளியிட மாட்டேங்கிறீங்க ?'

அப்புறம் என்னை வெளியில விடமாட்டாங்க !