நகைச்சுவை - 31

என்னங்க இது..... இன்றைய ஸ்பெசல் ரண்டக்க கூட்டு... ரண்டக்க சாம்பார்னு எழுதியிருக்கு?'

'ஹி ஹி வெண்டக்காயத்தான் அப்படி சீஸனுக்கேத்த மாதரி எழுதி இருக்கோம்!'

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

டீ குடிக்க...
டீ குடிக்க...
துட்டு கொடுடா....

குடிக்கிறதே ஓசி டீ...பஞ்சித்திலேயும் பந்தாவுக்கு குறச்சலில்லை !

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எங்க வீட்ல எல்லோரும் தனித்தனியாதான் சினிமாவுக்கு போவோம்....

ஏன் ?

இப்பதான் குடும்பத்தோடு பார்க்கிறமாதிரி சினிமாவே வர்றதில்லையே !

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தக் கதையை சினிமாவா எடுக்க நான் பத்து வருஶம்
தவம் இருந்தேன் !'

ஏன் ?

'இதே கதையை வெச்சு, இதுக்கு முந்தி வந்த படத்தை ஜனங்க
மறக்க வேணாமா ?'

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

'அந்த நடிகரைக் கட்சியில சேர்த்தது தப்பாப்போச்சு'

'ஏன் என்னாச்சு?'

'ஒன் டே முதல்வராகணும்னா எந்தத் தொகுதியில நிக்கணும்னு கேக்குறாரு!'.